BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 20 July 2014

MH17ஐ சுட்டுத்தள்ளிய ஏவுகணை அடங்கிய டிரக் கண்டுபிடிப்பு. உக்ரைனின் பெரும் பரபரப்பு.

நெதர்லாந்து நாட்டில் இருந்து மலேசியாவுக்கு சென்று கொண்டிருந்த MH17 விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏவுகணை அடங்கிய டிரக்கின் புகைப்படம் நேற்று இண்டர்நெட்டில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்த டிரைவர் ஒருவர் தனக்கு முன்னாள் ஒரு டிரக் 'புக்' என்ற ஏவுகணையை துணியால் மூடி ஏற்றி சென்றுகொண்டிருப்பதை தற்செயலாக பார்த்துள்ளார். உடனே தனது மொபைல் போனின் மூலம் அந்த டிரக்கை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். சுமார் இரண்டு கிலோமீட்டர் அந்த டிரைக்கை அவர் பின் தொடர்ந்துள்ளார். அதன்பின்னர் அந்த டிரக் ரஷ்ய எல்லையை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.




அந்த டிரக்கில் இருந்த ஏவுகணைதான் மலேசிய விமானம் MH 17ஐ தாக்கியுள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படங்களை அந்த டிரைவர் நேற்று மாலை இண்டர்நெட்டில் பதிவு செய்து தனது சந்தேகங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்களையும், உக்ரைன் அரசு சாட்டிலைட் மூலம் எடுத்த புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்க்கையில் அந்த டிரக்தான் புக் ஏவுகணையை கொண்டு சென்றுள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அந்த டிரக் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு சொந்தமானதுதான் என்பதும் உறுதிசெய்யபப்ட்டுள்ளது. ரஷ்யா ஆதரவுடன் இந்த படுபாதக செயலை செய்துள்ள கிளர்ச்சியாளர்களுக்கும், ரஷ்யாவுக்கும் உலக நாடுகள் கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்றன.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies