BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 1 August 2014

மின்னல் தாக்கி 170 பன்றிகள் உடல் கருகி பலி. சீனாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.

சீனாவில் பன்றிகள் வளர்ந்து வந்த பண்ணை ஒன்றில் திடீரென தாக்கிய மின்னல் ஒன்றினால் ஒரே நேரத்தில் 170 பன்றிகள் மின்னல் வேகத்தில் கருகி பலியாகின. இந்த பன்றிப்பண்ணையில் உரிமையாளருக்கு இதனால் சுமார் £30,000 நஷ்டமடைந்ததாக கூறப்படுகிறது.

தெற்கு சீனாவில் உள்ள Hunan province என்ற பகுதியில் உள்ள  Lu Qingsheng என்பவருக்கு சொந்தமான பன்றிப்பண்ணையில் சுமார் 400 பன்றிகள் வளர்க்கப்பட்டு வந்தன. நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் அந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பயங்கர மின்னல் ஒன்று பன்றிகள் வளர்ந்து வரும் பண்ணையை தாக்கியது. மின்னல் தாக்கிய வேகத்தில் ஹைபவர் வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து சில நொடிகளில் 170 பன்றிகள் உடல்கருகி பலியாகின.

இந்த துயர சம்பவம் நிகழ்ந்த போது இந்த பண்ணை உரிமையாளரின் மனைவி அந்த பகுதியில் ஒருசில பன்றிகளுக்கு உணவுகள் வழங்கிக்கொண்டிருந்ததாகவும், ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் 170 பன்றிகளை இழந்ததால் அவருக்கு பெருமளவு பண நஷ்டம் உண்டானதாகவும்,  Lu Qingsheng வருத்ததுடன் கூறினார். சுமார் £30,000 வரை நஷ்டமான தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோருக்கை விடுத்துள்ளார். இந்த துயர சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies