BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 18 August 2014

மும்பை உறியடி திருவிழாவில் 18 பேர் காயம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு உறியடி திருவிழா (தாஹி ஹந்தி) விமரிசையாக கொண்டாடப்படும். கேளிக்கை மற்றும் ஆடம்பரமாக கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் உயரமாக கட்டப்பட்டுள்ள ஒரு பாத்திரத்தில் வெண்ணையுடன் பரிசுப்பொருட்கள் இருக்கும்.

பிரமிடு போன்று இளைஞர்கள் ஒருவர்மீது ஒருவர் ஏறி நின்று அந்த பாத்திரத்தில் உள்ள பரிசுப்பொருட்களை எடுப்பார்கள். அப்படி இன்று மும்பையில் நடைபெற்ற விழாவில் 18 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

காயமடைந்தவர்கள் சியோன் மற்றும் கேஇஎன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கே.இ.எம். மருத்துவமனை டீன் கூறும்போது ‘‘உறியடி விழாவில் கலந்துகொண்டபோது கீழே விழுந்து அடிபட்டதாக 12 பேர் இந்த ஆஸ்பத்திரியில் சிகிக்சைக்காக வந்தார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் அடிப்படையில் சிகிச்சை அளித்து வருகிறோம்” என்றார்.

''5 பேர் சீயோன் மருத்துவமனைக்கு வந்தார்கள். அவர்களிடம் 3 பேர் சிகிச்சை முடிந்து வெளியேறிவிட்டார்கள். இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தலையில் அடிபட்டுள்ளது'' என்று சீயோன் மருத்துவமனை டீன் தெரிவித்தார்.

இந்த விழாவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அந்த தடையை நீக்கியது குறிப்பிடத்தக்கது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies