BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 2 August 2014

அமெரிக்காவில் 3 மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக $1மில்லியன் லாட்டரி பரிசு பெற்ற அதிர்ஷ்ட நபர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு மூன்றே மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக ஒரு மில்லியன் டாலர் லாட்டரி பரிசு கிடைத்துள்ளது. இந்த அதிர்ஷ்டசாலியை நாட்டு மக்கள் பெரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

அமெரிக்காவின் இண்டியானா என்ற பகுதியை சேர்ந்த ஹாமில்டன் ராபர்ட் என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் லாட்டரி ஒன்றில் $1மில்லியன் பரிசு கிடைத்தது. அந்த பணத்தில் அவர் தனக்கு ஒரு சொந்த வீடு, தனது தந்தைக்கு ஒரு டிரக், மனைவிக்கு தேவையான பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவைகளை வாங்கினார். மேலும் மீதியுள்ள பணத்தை அவர் உலக நாடுகளுக்கு மனைவியுடன் சுற்றுலா செல்வதற்கும் தனது தொழிலில் முதலீடு செய்யவும் பயன்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை நடந்த மற்றொரு லாட்டரி சீட்டு குலுக்கலில் மீண்டும் ஹாமில்டன் ராபர்ட்டுகே முதல் பரிசான $1மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இம்முறை அவர் தனக்கு பரிசு விழுந்ததை முதலில் நம்பவே இல்லை. அதன்பின்னர் பரிசு அவருக்குத்தான் என்பது உறுதியானதும் அவரும் அவர் மனைவியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இம்முறை லாட்டரியில் விழுந்த பணத்தை சமூக சேவைகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் பெருமளவு செலவழிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். மூன்று மாத இடைவெளியில் இரண்டாவது முறை பெரிய தொகைகள் பரிசு விழுந்த அதிர்ஷ்ட நபரை அமெரிக்காவே பார்த்து ஆச்சரியப்படுகிறது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies