BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 21 August 2014

ரூ.50 லட்சம் செக் மோசடி வழக்கு: டைரக்டர் சரண் கைது

காதல்மன்னன், அமர்க்களம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., உள்பட பல்வேறு படங்களை இயக்கியவர் டைரக்டர் சரண். தற்போது இவர் ‘ஆயிரத்தில் இருவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நெல்லை ரெட்டியார்பட்டி பைபாஸ் சாலையில் படப்பிடிப்பு நடந்தது. இதில் டைரக்டர் சரண் கலந்து கொண்டு படத்தின் காட்சிகள் குறித்து நடிகர், நடிகைகளுக்கு விளக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தை சேர்ந்த தனிப்படை போலீசார் வந்தனர். உடனே சரண் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு போலீசாரிடம் விளக்கம் கேட்டார். அவர்கள் ரூ.50 லட்சம் செக் மோசடி வழக்கில் உங்களுக்கு சிவகாசி கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ஆஜர்படுத்த உங்களை கைது செய்கிறோம் என்றனர்.

இதையடுத்து போலீசார் சரணை கைது செய்து போலீஸ் வேனில் சிவகாசி கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். இதன் காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. செக் மோசடி வழக்கில் டைரக்டர் சரண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies