தமிழில் குத்தாட்டம் போடுவதற்கு முமைத் கான் என்றால் பாலிவுட்டில் அந்த வேலையை செய்து வருபவர் ஸ்ருதி ஹாசன் ஆவார். பாலிவுட்டில் சஞ்சய் கபூர் தான் தயாரிக்க உள்ள அடுத்த படமான மத்யமா என்ற படத்தில்தான் ஸ்ருதிஹாசன் குத்தாட்டம் ஆட உள்ளார். மத்யமா என்ற இந்த படத்தில் அர்ஜூன் கபூர் மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஜோடியாக நடிக்கின்றனர் .
இதில் ஒரு குத்தாட்டம் ஆடுவதற்கு ஸ்ருதி ஹாசன் கேட்டு உள்ள சம்பளம் 75 லட்சம் ஆகும். அவர் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளமே 1 கோடி தான். ஆனால் வெறும் 15 நாட்கள் கால்ஷீட் தந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி 75 லட்சம் சம்பாதிக்கவுள்ளார்.

