BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 2 August 2014

900 ஆண்டுகளுக்கு பின் உடைக்கப்பட்ட மரபு:பெண் அர்ச்சர்கள்

மராட்டிய மாநிலம் பாந்தார்பூர் என்ற நகரில் 900 ஆண்டு பழமை வாய்ந்த வித்தால்– ருக்மணி அம்மன் கோவில் உள்ளது. மராட்டியத்தில் வர்காரி என்ற இனந்தவர்களின் குலதெய்வமாக இது விளங்குகிறது. ஆண்டுதோறும் 2 கோடி பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வழிபடுகிறார்கள்.



அஷாத் என்ற புனித மாதத்தில் வர்காரி இன மக்களும், மற்ற இனத்தவர்களும் இந்த கோவிலுக்கு நடைபயணமாக சென்று தரிசனம் செய்வார்கள்.

இந்த கோவிலில் அன்றாட பூஜைகள் செய்ய பெண் அர்ச்சர்கள் மற்றும் உயர் வகுப்பினர் அல்லாத இதர பிரிவினரையும் அனுமதிக்கலாம் என்று சுப்ரீம்கோர்ட் இந்த ஆண்டு தொடக்கத்தில் அனுமதி வழங்கியது.

இதையடுத்து கோவில் பூசாரி பணிக்கு பெண்கள் மற்றும் இதர பிரிவினர் 129 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 16 பெண்களை கோவில் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

இதுபற்றி கோவில் நிர்வாக தலைவர் அன்னா டாங்கே கூறுகையில், குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டுமே இங்கு பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தற்போது 900 ஆண்டுகளுக்கு பின் அந்த மரபு உடைக்கப்பட்டு அனைவரும் பூஜை செய்யலாம் என்ற முன் மாதிரியான முடிவை எடுத்துள்ளது என்றார்.


முதல் கட்டமாக 16 அர்ச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் பெண்கள் ஆவார்கள். அவர்களில் ஊர்மிளா பதே என்ற பெண் முதன் முதலாக கோவிலுக்கு சென்று பூஜைகளை நடத்தினார்.

பெண் அர்ச்சர்கள் ருக்மணி அம்மனுக்கு மட்டும் பூஜைகள் செய்வார்கள். வித்தால் சுவாமிக்கு ஆண் அர்ச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies