BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 16 August 2014

கத்தி பட சர்ச்சை: நடிகர் விஜய்க்கு மாணவர்கள் ஆதரவு

விஜய்– சமந்தா ஜோடியாக நடிக்கும் கத்தி படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு திடீர் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது என்றும் எனவே படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்றும் சிலர் எதிர்த்தனர். போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.

லைக்கா நிறுவனம் இலங்கை தமிழருக்கு சொந்தமானது என்றும் ராஜபக்சேவுடன் எந்த தொடர்பும் கிடையாது என்றும் படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்ப்புகள் தொடர்கின்றன. இந்த நிலையில் நாம் தமிழ் கட்சி தலைவர் சீமான் இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன் ஆகியோர் இப்பிரச்சினையில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

தமிழர்கள் இணைந்து கத்தி படத்தை எடுக்கின்றனர் என்றும் அதை தடுக்க கூடாது என்றும் கூறினார்கள். தற்போது மாணவர் அமைப்புகளும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. சென்னையில் உள்ள கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் விஜய்யை நேரில் சந்தித்து கத்தி படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். படம் வெளியாக துணை நிற்போம் என்றும் உறுதி அளித்தனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies