BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 1 August 2014

ஜாதி மாறி திருமணம் தலையணையால் அமுக்கி மகளை கவுரவ கொலை செய்த தந்தை

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சடையன் கிராமத்தைச் சேர்ந்தவர் அல்லி ராஜன். இவருடைய 16 வயது மகள் திவ்யா. 10–ம் வகுப்பு படித்து உள்ளார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (24) என்பவரை காதலித்தார். சரண்ராஜ் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
வேறு சமுதாயத்தை சேர்ந்த இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிட்டார்கள். இதுகுறித்து திவ்யாவின் தந்தை அல்லிராஜன் மதுரை ஐகோர்ட்டில் ஆட் கொணர்வு மனுதாக்கல் செய்தார்.

இதையடுத்து திவ்யாவை சரண்ராஜ் கோர்ட்டில் ஒப்படைத்தார். கோர்ட்டு உத்தரவுப்படி மதுரை காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட திவ்யா பின்னர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

வேறு பிரிவை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்ததால் திவ்யாவை அவருடைய பெற்றோர் ஏற்கமறுத்தனர். அவரை சித்தியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

சிலநாட்களுக்கு முன் கோவில் திருவிழாவுக்காக கதையன் கிராமத்துக்கு வந்த திவ்யா நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்துகிடந்தார்.
இதுகுறித்து முதுகுளத்தூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

திவ்யா கவுரவ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவருடைய உடல் உறுப்புகளை வேதியியல் பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர். வேதியியல் பரிசோதனையில் திவ்யா மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து இருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், “மகள் என்றும் பாராமல் அவரை தலையணையால் முகத்தில் வைத்து அழுத்தி, அல்லி ராஜன் கவுரவ கொலை செய்தது தெரிந்தது. இதைத் தொடர்ந்து முதுகுளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் கொலை வழக்கு பதிவு செய்து அல்லிராஜனை கைது செய்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தை சேர்ந்த வைதேகி என்ற பெண் கவுரவக் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது 10–ம் வகுப்பு மாணவி கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies