BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 29 August 2014

ஷகிரா கர்பமாக இருக்கும் செய்தி கேட்டு சந்தோஷப்பட்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்





இன்றைய உலகில் ஒரு தனி மனிதனுக்கு என அதிக ரசிகர்கள் இருப்பது யாருக்கு என்றால் அது கொலம்பியா நாட்டை சேர்ந்த பாடகி ஷகிராவுக்கு தான் இருக்கும். பேஸ்புக்கில் இவரது பக்கத்தை 102 மில்லியன் பேர் லைக் செய்து உள்ளார்கள். இது பேஸ்புக்கில் ஒரு சாதனையாகும். இந்த சாதனையை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பாராட்டி இருந்தார். இவர் ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரர் ஜிரார்டு பிக்யுவுடன் 2010 உலக கோப்பையின் போது காதலில் மலர்ந்தார். அதன் பின்பு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு 2013 ஜனவரி மாதம் மிலன் என்னும் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை சமீபத்தில் முடிந்த கால்பந்து உலக கோப்பைக்காக ஷகிரா பாடிய லா லா பாடலில் வரும்.

இந்நிலையில் ஷகிரா 2 வது குழந்தைக்கு தாயாக உள்ளார். அவர் கர்பமாக இருக்கும் செய்தியை அவரே தனது பேஸ்புக் பக்கத்தில்  வெளியிட்டார். இதனை பார்த்து விட்டு , அந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க். அந்த ஜோடியை பார்த்து அவர் சந்தோஷப்படுவதாக கமென்ட் அடித்து இருந்தார். ஷகிராவுக்கு 37 வயதும் பிக்யுவுக்கு 27 வயதும் ஆகிறது என்பது குறிபிடத்தக்கது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies