BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Friday, 1 August 2014

கமல்ஹாசனின் சண்டியருக்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல்வாதிகள் தற்போது ஓடி ஒளிவது ஏன்?

கடந்த 2004ஆம் ஆண்டு விருமாண்டி என்ற பெயரில் கமல்ஹாசன், பசுபதி, அபிராமி, ரோஹினி ஆகியோர் நடிப்பில் ஒரு திரைப்படம் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு முதலில் கமல்ஹாசன் 'சண்டியர்' என்ற பெயரைத்தான் வைத்திருந்தார். ஆனால் அந்த சமயத்தில் இந்த பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போராட்டம் நடத்தியதால் பின்னர் தமிழக அரசு தலையிட்டு கமல்ஹாசனின் படத்திற்கு பெயரை மாற்றுமாறு அறிவுறுத்தியது. அதன்பின்னர் வேறு வழியின்றி கமல்ஹாசன் 'விருமாண்டி' என்ற பெயர் வைத்து படத்தை ரிலீஸ் செய்தார். ஆனால் அவர் பல சமயங்களில் இதுகுறித்து வருத்தமான தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது அதே சண்டியர் என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளிவர இருக்கின்றது. ஜெகன், கயல், நாயகம் ஆகியோர் நடிப்பில் சோழதேவன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட எந்த அரசியல்வாதியும் எவ்வித கருத்தும், எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். கமல்ஹாசன் இதே பெயரில் திரைபடம் எடுத்தபோது பொங்கியெழுத அரசியல்வாதிகள் தற்போது அமைதியாக இருப்பது ஏன்? என்ற கேள்வி சமூக வலைத்தளத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.

பெரிய நடிகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தால்தான் பரபரப்பு இருக்கும், தன்னுடைய பெயரும் கட்சியும் விளம்பரமாகும் என செயல்படும் இவர்கள் போன்ற போலி அரசியல்வாதிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies