காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை, போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து அவரது தாய்மாமன் அரிவாளால் வெட்டினார்.
காதல் திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அந்தேவனப்பள்ளியைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரது மகன் மஞ்சு (வயது 23). கார் டிரைவரான இவர் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் ரத்னாவை (19) காதலித்தார். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 26–ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டார்கள்.
அதே சமயம் மகளை காணவில்லை என்று ரத்னாவின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். ஆனால் காதல் ஜோடி மஞ்சு–ரத்னா ஆகியோர் திருமண ஜோடியாக நேற்று மாலை தேன்கனிக்கோட்டை போலீசில் ஆஜராயினர்.
சரமாரி வெட்டு
அப்போது இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ரத்னாவின் தாய்மாமன் மாரப்பன் (30) அங்கு ஆத்திரத்துடன் வந்தார். அவர் ரத்னாவை தனியாக பேச வேண்டும் என்று அழைத்தார். இதை நம்பி ரத்னாவும் தாய்மாமனுடன் வெளியே வந்தார்.
பேசிக்கொண்டிருந்தபோதே கோபம் தலைக்கேறிய மாரப்பன், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரத்னாவை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்னாவின் கழுத்திலும், கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு, காதல் கணவர் மஞ்சுவும், போலீசாரும் அங்கு ஓடிச் சென்று மாரப்பனின் தாக்குதலில் இருந்து ரத்னாவை மீட்டனர். இதனால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணை
உடனடியாக ரத்னா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாரப்பனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.