BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 2 August 2014

கொடி போல இடை வேண்டுமா? இதைப் படிங்க!

பெண்களின் இடையே கொடியோடு ஒப்பிட்டு கவிஞர்கள் எழுதியுள்ளனர். ஆனால் இன்றைய உணவுப்பழக்கத்தினால் ஜீரோ சைஸ் இடை ஒரு சிலருக்கு மட்டுமே வாய்கிறது. இடுப்பு பகுதியில் அதிகம் சதை போட்டால் உடலின் அழகான வடிவமே மாறிவிடும். அந்த அளவிற்கு உடலின் வடிவத்தோடு தொடர்புடையது. சரியான உடற்பயிற்சி மேற்கொண்டால் அனைவராலும் கொடி போன்ற இடைக்கு மாறமுடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். ஜிம் போகாமல், செலவு செய்யாமல் கொடி இடை பெற நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றலாம்.
சிக் உடல் பெற
கச்சிதமான உடலுடன் இருக்க விரும்பும் பெண்களுக்கு உடலில் அதற்கு தகுந்த மாதிரி தசை இருப்பது அவசியம். சிறிய தசைகள் மீது போதிய கவனம் செலுத்தினால் உடல் நல்ல வடிவத்தைப் பெறும். இந்த தசைகளைச் சுற்றி குறைந்த அளவு கொழுப்பே இருப்பதால் மேக்ரோ ஏரியாக்கள் எனப்படும் தொடை மற்றும் பின்புறம் மீதே நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். சிறிய தசைகள் உள்ள பகுதிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் குறைந்த காலத்தில் சிக் கென்ற உடம்பைப் பெற முடியும்.
வயிற்றுப் பயிற்சி
தட்டையான வயிற்றைப் பெற இந்தப் பயிற்சியைப் பெறவும். தரையில் மல்லாந்து படுக்கவும். பாதம் தரையில் படும்படி இருக்க வேண்டும். கைகளை விட்டம் நோக்கி உயர்த்தும் போது வயிற்றை இறுக்கமாக வைத்திருக்கவும். இடுப்புப் பகுதியிலிருந்து கால்களை உயர்த்தவும். கொண்டைக்கால் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். முதுகை தட்டையாக தரையில் படும்படி வைத்து கைகளை தலையை நோக்கி கொண்டு வரவும். இதே சமயத்தில் உங்கள் வலது காலை நீட்டவும். ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும். மீண்டும் பழைய நிலைக்கு வந்து இடது காலை நீட்டவும்.
அழகான தோள்கள்
நல்ல வடிவமான தோள்கள் உங்கள் இடுப்பை சிறியதாகக் காட்ட உதவும். இதற்கு மிக எளிதான பயிற்சி ஒன்று உள்ளது. தரையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். இந்த நிலையில் தலை மற்றும் மார்பை உயர்த்தவும்.
தோள் பட்டையை குறுக்கி வயிற்றுத் தசைகளை இறுக்கமாக வைத்துக் கொண்டு நிமிரவும். இந்த நிலையில் ஒன்று முதல் ஆறுவரை எண்ணவும். இந்த பயிற்சியை 12 தடவைகள் செய்யவும்.
முதுகுப் பயிற்சி
வலிமையான முதுகு உங்கள் தோற்றத்தை செம்மையாக்கும். உங்களை ஸ்லிம்மாக காட்ட உதவும். ஒரு நாற்காலியில் உட்கார்ந்து பாதங்களைத் தரையில் பதித்துக் கொள்ளுங்கள். அப்படியே முன்புறமாக முதுகை (நிமிர்த்திய நிலையில்) வளைத்து முழங்கால்களின் மீது மார்பு படும் நிலைக்கு வரவும். உங்கள் கைகள் ஒவ்வொன்றிலும் 2 அல்லது 3 கிலோ எடையை பிடித்துக் கொண்டு கீழ்புறமாக தொங்க விடவும். கைகளை மெல்ல தோளுக்கு இணையாக (பக்க வாட்டில்) உயர்த்தவும். பிறகு மெல்ல கீழிறக்கவும். 10 தடவை இப்படிச் செய்யவும். இடைவெளி விட்டுவிட்டு இந்தப் பயிற்சியை 3 முறை செய்யவும்.
இடுப்பு குறைய
படுக்கையை விரித்து அதில் வலது புறம் திரும்பி படுக்கவும். வலது கையை தலைக்கு மேல் நீட்டவும், இடது கையை வயிற்றின் முன் பகுதியில் ஊன்றிபடி வைக்கவும். வலதுகாலின் மீது இடதுகால் இருக்குமாறு வைக்கவும்.
இதே நிலையில் மெதுவாக இடதுகாலை 45 டிகிரி அளவிற்கு உயர்த்தவும். இருபது எண்ணும் வரை மேலே உயர்த்தியவாறு இருக்கவும். பின்னர் மெதுவாக பொஸிசனுக்கு வரவும். இதேபோல் இடது பக்கம் திரும்பி படுத்து வலது காலை உயர்த்தவும். இதனால் தொடை, இடுப்பு பகுதிகள் ஒரு வடிவத்திற்கு வரும்.
ஜன்னலைப் பிடித்துக் கொண்டு இடுப்பைத் திருப்ப வேண்டும். கால்களுக்குக் கீழே பவுடரைப் போட்டு வட்டமாகத் திருப்பினால் இடுப்பும் சரியான முறையில் அமையும். இது நல்ல பயிற்சியாகும். தினசரி செய்து வந்தால் கொடியிடையைப் பெறலாம்.
புளிப்பு வேண்டாம்
அன்னாசிப் பழம் கொழுப்பை கரைக்கும். அன்னாசிப் பழத்தை வெட்டி ஓமம் சேர்த்து வேகவைத்து வடிகட்டி குடிக்க இடுப்பு சதை குறையும்.
புளிப்பான பொருட்களான புளித்த தயிர், புளிக்குழம்பு போன்றவைகளை சாப்பிடக் கூடாது, அதேபோல் ஊறுகாயும் சாப்பிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்பு உணவுகளை தவிர்த்து விடவேண்டும் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies