BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 2 August 2014

கழற்றி விட்ட கள்ளக்காதலி முகத்தில் ஆசிட் வீசிய வாலிபர் தலைமறைவு

உத்தரப்பிரதேசம் மாநிலம், எட்டாவா மாவட்டத்தில் உள்ள கன்ஷிராம் காலனியை சேர்ந்த ஒரு பெண், தனது கணவரை விவாகரத்து செய்து விட்டு, அதே பகுதியை சேர்ந்த இர்பான்(25) என்பவருடன் கடந்த ஓராண்டு காலமாக கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

தனிமையில் வந்து சந்திக்கும்படி அந்த பெண்ணை கடந்த வெள்ளிக்கிழமை இர்பான் அழைத்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இர்பான், அந்த பெண்ணின் இருப்பிடத்தை தேடிச் சென்று, அவர் சற்றும் எதிர்பாராத நிலையில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அவரது முகத்தில் ஊற்றி விட்டு, அந்த இடத்தில் இருந்து தப்பித் தலைமறைவானார்.

எரிச்சல் தாங்க முடியாமல் அலறித் துடித்த அந்த பெண்ணின் கூக்குரலை கேட்ட அக்கம்பக்கத்தினர், அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். 30 சதவீத தீக்காயங்களுடன் அந்த பெண் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை இந்த கதிக்கு ஆளாக்கிய இர்பானை போலீசார் தேடி வருகின்றனர்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies