விஜய் சம்ந்தா நடித்து வரும் படம் கத்தி. இந்த படத்தை விஜய்யை வைத்து துப்பாக்கி படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்து உள்ளார்கள். அதற்குள் எல்லா காட்சிகளையும் முடித்து விட வேண்டும் என உள்ளார்கள்.
இந்த படத்தின் இசை செப்டம்பர் மாதம் 2 வது வாரம் வெளிவரும் என தகவல்கள் வருகின்றன. அது குறித்து சரியான தேதி இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் கத்தி படத்தின் பாடல்களில் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் இருக்கும் என படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். விஜய்யை பாட உள்ள பாடல் முடிந்து விட்டது, விஜய் பாட வேண்டியது தான் இன்னும் உள்ளது என்றார். கத்தி படத்தின் இசை வெளீயிட்டு விழா குறித்து தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்கலாம்.

