இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவன் ஜெரார்ட்டிடம் கையெழுத்து வாங்கிய ரசிகரை அவருடன் செல்ஃபீயில் புகைப்படம் எடுக்கும் போது உணர்ச்சியில் கதறி அழுதார்.பல ரசிகர்களும் தங்களுடைய மனம் கவரந்த வீரர்களை பார்க்கும் போது உணர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் திரிவார்கள். அந்த வகையில் ஸ்டீவன் ஜெரார்ட்டின் ரசிகை ஒருவர் கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்.
லிவர்பூல் அணிக்காக விளையாடும் ஸ்டீவன் ஜெரார்ட் தன் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகை ஒருவரின் போராட்டத்தை பார்த்து அந்த ரசிகையில் பக்கத்தில் சென்றார் ஜெரார்ட்.
அப்போது எல்லை இல்லா மகிழ்ச்சியில் இருந்த அந்த ரசிகை ஜெரார்ட்டின் கன்னத்தில் முத்தமிட்டு ”ஐ லவ் யூ” என கூறி அன்பை வெளிப்படுத்தினார்.
பின்னர் அவர் அந்த ரசிகையிடம் இருந்து நழுவினார். ஜெரார்ட் என்னிடம் இருந்து போகிறாரே என்று அந்த ரசிகை கதறி அழ ஆரமித்துவிட்டார். இதைனையடுத்து மற்றொரு ரசிகை அவரை ஆறுதல்படுத்தினார்.
