BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 2 August 2014

நாங்கள் யாரால் தோற்றோம் தெரியுமா? சொல்கிறார் டோனி

இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்து அனைவரின் விமர்சனத்திற்கும் ஆளானது.
இந்த மோசமான தோல்விக்கு தென் ஆப்பிரிக்க சுழல்பந்து வீச்சாளர் மொயீன் அலியை ஆதிக்கம் செலுத்தவிட்டது தான் காரணமாக அமைந்து விட்டது என டோனி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த தோல்வி குறித்து இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில், 2வது டெஸ்ட் போட்டியை போலவே, அடுத்த போட்டியிலும் இங்கிலாந்தை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று நான் நினைக்கவில்லை.

20 விக்கெட்டுகளை வீழ்த்தினால் தான் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியும். ஆனால் இப்போட்டியில் நாங்கள் 10 விக்கெட்டுகளை கூட வீழ்த்தவில்லை. இதுதான் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முக்கிய காரணமாகும்.

இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர்கள் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை நன்றாக சமாளித்தார்கள். ஆனால் சுழல்பந்து வீச்சாளர் மொயீன் அலியை, ஆதிக்கம் செலுத்தவிட்டுவிட்டோம்.

துடுப்பாட்டக்காரர்கள் அதிரடியாக செயல்பட்டு, சரியான அளவில் பந்து வீச முடியாதபடி செய்திருந்தால் மொயீன் அலியால் ஆதிக்கம் செலுத்தியிருக்க முடியாது.

வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா காயத்தில் இருந்து இன்னும் குணமடையாததால் அடுத்த டெஸ்ட் போட்டியிலும் அவரால் விளையாட முடியாது.

இந்த டெஸ்ட் போட்டியின் மூலமாக, நாங்கள் எங்கள் ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து விட்டோம் என்று கூறியுள்ளார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies