BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 2 August 2014

அதிக அளவில் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை

புதிதாக திருமணமானவர்களுக்கு செக்ஸ் குறித்த ஆர்வமும், வேகமும் அதிகமாக இருக்கும்.
ஒரு நாளைக்கு இரண்டுக்கும் மேற்பட்ட முறை கூட உறவு வைத்துக் கொள்ள விரும்புவார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். அதிக அளவிலான உறவால் உண்மையில் நியூராட்டிசம் போன்றவை மட்டுப் பட உதவுகிறது. எனவே அதிக அளவில் உறவு வைத்துக் கொள்வதிலும் தவறில்லை என்பது மருத்துவர்கள் தரும் ஆலோசனை.

நியூராட்டிசம் பிரச்சினை இருப்பவர்கள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள், எரிச்சல் படுவார்கள். யாராவது ஏதாவது சொன்னால் சட்டமென்று மூக்கு நுனியில் கோபம் வந்து விடும். இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கு திருமணமும், தாம்பத்ய உறவும் மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது என்கிறது ஒரு ஆய்வு. அதுதான் அவர்களது மண வாழ்க்கை பெரும் மகிழ்ச்சிக்குரியதாக மாற நல்ல அடித்தளமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இனிய மண வாழ்க்கை


இதுகுறித்து நடத்தப்பட்ட ஒருஆய்வில், புதிதாக மணமான ஜோடியை சோதனைக்கு உட்படுத்தினர். அவர்களிடம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முதல் நான்கு ஆண்டுகளுக்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் ஆரம்பத்தில் அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை அவர்களுக்கு (ஆண் மற்றும் பெண்களுக்கு) எந்தவிதமான டென்ஷனும் வரவே இல்லையாம். பதட்டம் குறைந்து, மிகுந்த மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருந்துள்ளனர்.

இதற்கு முக்கியக் காரணம், இந்த கால கட்டத்தில் அவர்கள் அதிக அளவில் தாம்பத்ய உறவில் ஈடுபட்டதே இதற்கு காரணம். ஒரு ஆண்டு கழித்து தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளும் அளவு குறையத் தொடங்கியுள்ளது. இதனால் அவ்வப்போது எரிச்சல் வந்து எட்டிப் பார்த்துள்ளது அவர்களிடம். அதேசமயம், பெரிய அளவி்ல் டென்ஷனுக்குள்ளாகவில்லை. காரணம், வாரத்திற்கு குறைந்தது 3 முறையாவது அவர்கள் உறவில் ஈடுபட்டனர்.

நரம்பியல் கோளாறுகள் தீரும்


4வது ஆண்டுவாக்கில் அவர்களுக்குள் உறவுகள் குறைந்து வந்திருப்பதை ஆய்வின் மூலம் மருத்துவர்கள் கண்டறிந்தனர். அதாவது மாதத்திற்கு 3 அல்லது 4 முறை மட்டுமே உறவு கொள்ள ஆரம்பித்துள்ளனர் ஜோடிகள். இதனால் நியூராட்டிசம் அவர்களிடையே எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தாம்பத்ய உறவு நரம்பியல் கோளாறுகளுக்கு நல்ல மருந்து என்பது டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பக்குவமடையும் மனம்

எனவே புதிதாக திருமணமானவர்கள் எவ்வளவு முடியுமோ, அந்த அளவுக்கு உறவு கொள்வதில் ஆர்வம் காட்டலாம். உடல் நலம் பாதிக்காத அளவுக்கு பார்த்துக் கொண்டு, தாம்பத்ய உறவில் அதிக அளவில் ஈடுபடுவது அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பக்குவப்படுத்த உதவும் என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று என்கிறார்கள் ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர்கள்.

எனவே எதற்கெடுத்தாலும் வெக்ஸ் ஆகும் பழக்கம் உடையவர்கள், டென்சன் ஆகும் குணமுடையவர்கள், காலாகாலத்தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆக விடலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies