BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 25 August 2014

கண்ணம் துடிக்கும், கரண்ட் பாக்ஸ் வெடிக்கும்! கேப்டன் ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் 80களில் இருந்து இன்று வரை சிம்மாசனம் போட்டு ஆழ்பவர்கள் ரஜினி, கமல். ஆனால் இவர்களே ஒருவரின் வளர்ச்சியை கண்டு நடுங்கினார்கள் என்றால் அது தமிழக மக்கள் அனைவரும் செல்லமாக கேப்டன் என்று அழைக்கும் விஜயகாந்த் அவர்கள் தான்.

ரஜினிக்கு பிறகு கருமை நிறத்துடன் வந்து சினிமாவில் வெற்றிபெற்ற ஒரே கதாநாயகன் இவர் தான். இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்து அதில் குறைந்தது 100 படங்கள் வெற்றிபடமாக நடித்து திரைத்துறையில் யாரும் தொடமுடியாத உச்சத்தில் இருந்தவர்.

இன்று காக்கிசட்டை அணியும் ஒவ்வொரு இளம் கதாநாயகர்களுக்கும் ரோல் மாடல் இவர் தான், ஏறக்குறைய 50 படங்களுக்கு மேல் போலிஸ் அதிகரியாக நடித்து சாதனை படைத்தவர். அதில் ஊமை விழிகள், புலன் விசாரணை, மாநகரகாவல், கேப்டன் பிரபாகரன், வல்லரசு, வாஞ்சிநாதன், அலெக்சாண்டர், சத்ரியன், சேதுபதி IPS, விருதகிரி என அடுக்கி கொண்டே போகலாம்.

இது மட்டுமில்லாமல் இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் ஒரு பக்கம் வசனம் பேசுவதற்கே திண்டாடுகிறார்கள். ஆனால் நம் கேப்டன் பேச ஆரம்பித்தால் கண்ணம் துடிக்கும், கரண்ட் பாக்ஸ் வெடிக்கும். நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் ஃபிங்கர் டிப்பில் வைத்து, ஒரே டேக்கில் பேசி பார்ப்போரை தண்ணீர் குடிக்க வைப்பார்.

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்து, அதிலும் வெற்றிபெற்று இன்று தமிழகத்தின் எதிர்கட்சியாக வளர்ந்து நிற்கிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இவருக்கு தனி ரசிகர் பாட்டாளமே உள்ளது. இவை ரஜினி, கமல் ரசிகர்களையே மிஞ்சும் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் தவசி, சின்ன கவுண்டர், சொக்கதங்கம் போன்ற பல கிராமத்து கதைகளில் நடித்து எல்லோரையும் கவர்ந்தவர்.

இவர் தமிழ் திரையுலகிற்கு விடை கொடுத்து, அரசியலுக்கு சென்றாலும் இவர் எப்போது மீண்டும் காக்கிசட்டை அணிந்து நடிப்பார் என்று தமிழக மக்கள் அனைவரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இன்னும் அவரது ஸ்டையிலேயே சொல்ல வேண்டுமென்றால் ‘வரனும் நீங்க பழைய பன்னீர் செல்வமா வரனும்’.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies