அதிமுக பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க. சட்ட திட்ட விதிகளின் படி, கட்சி அமைப்புகளுக்கான பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். அந்தவகையில் கடந்த 2008-ம் ஆண்டு பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடந்தது. தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 29-ந் தேதி நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பெயரில் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்வதால் அவர் வெற்றி பெறுவது உறுதி ஆகும்.

