BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 25 August 2014

பாட்டு என்னாச்சு தம்பி; அனிருத்தை வறுத்தெடுத்த விஜய்

கத்தி படம் ஆரம்பித்த முதலே பலப்பிரச்சனைகள் வந்து வந்து போகின்றன. ஆனால் அதையெல்லாம் காதிலும் கேட்காமல், கண்ணால் பார்க்காத மாதிரி படத்தை வளர்த்துக் கொண்டேயிருக்கிறார்கள். தற்போது கத்தி படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் வந்துவிட்டது. ஆனால் கத்தி படத்தின் இசையமைப்பாளரான அனிருத் தரப்பிலிருந்து 2 பாடல்கள் மட்டும் வரவேண்டுமாம்.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருந்த டாணா படத்தின் பாடல்களை விஜய், ஏ.ஆர்.முருகதாஸுக்கு போட்டுகாட்ட அட இதுவே சூப்பரா இருக்கே இந்த 3 பாட்டு கத்தி படத்துல வெச்சுரலாம் என்று கூறிவிட்டார்களாம். சரி போகட்டும் என்று சிவகார்த்திகேயனும் அமைதி காத்தார் என்பதெல்லாம் நாம் அறிந்த விஷயம் தான்.

தற்போது படத்தின் மீதி இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து தினமும் ட்யூன்களை விஜய்க்கு அனுப்பிக் கொண்டேயிருக்கிறாராம் ஆனால் விஜய் தரப்பில் இந்த பாட்டு எல்லாமே ஏற்கனவே கேட்டமாதிரி இருக்கு புதுசா யோசிங்கன்னு சொல்லி அனிருத்தை கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்களாம் விஜய்யும், ஏ.ஆர்.முருகதாஸும். இதனால் கடுப்பாகிப்போன அனிருத் அமெரிக்கா செல்ல முடிவெடுத்து அதற்கான வேலைகளில் இருக்கும்போது ஏ.ஆர்.முருகதாஸ் அனிருத்தை தொடர்பு கொண்டு எங்க தம்பி டியூன் எதுவும் வரலையே என்று கேட்க, அதற்கு அனிருத் “ நான் அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருக்கிறேன் போயிட்டு வந்து டியூன்களை அனுப்பி வைக்கிறேன் என்று கூற” ஏ.ஆர்.முருகதாஸும், விஜய்யும் அனிருத்தை பொறித்து எடுத்துவிட்டார்களாம். இதனால் ஏர்போர்ட் பக்கம் போகாமல் நேராக ஸ்டுடியோவுக்கு சென்று பாடலை கம்போஸ் செய்து கொண்டிருக்கிறாராம்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies