ஒரு நான்கு மாடி கட்டிடத்தில் ஏறி நின்று கீழே பார்த்தாலே சிலருக்கு தலை சுற்றும். ஆனால் இங்கு மூன்று பேர் 1135 உயரக் கட்டிடத்தில் இருந்து செல்பி எடுத்துள்ளார்கள். இது தான் ஹாங்காங்கின் 5 வது உயர்ந்த கட்டிடமான தி சென்டர் ஸ்கை ஸ்கராப்பர் கட்டிடத்தில் இருந்து எடுத்தது. இந்த உயரமான கட்டிடத்துக்கு சென்ற இந்த மூன்று பேரும், வாழை பழம் சாப்பிடுவதை போல் ஒரு செல்பி எடுத்துள்ளார்கள். இது இப்போது உலகின் டெரர் செல்பியாக மாறி வருகிறது. இவர்கள் செய்த இந்த சாதனை வீடியோவை யூடியூபில் வெளியிட்டு உள்ளார்கள். இதனை பலரும் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

