BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 19 August 2014

நடக்கும் பாதையில்முள் போடாதீங்க: சூர்யா உருக்கம்

நடக்கும் பாதையில் முள்போடாதீர்கள் என்று உருக்கமாக கூறினார் சூர்யா.சூர்யா, சமந்தா நடித்துள்ள படம் ‘அஞ்சான். படம் பற்றி சூர்யா உருக்கமாக பேசினார். அவர் கூறியதாவது:சினிமாவில் எல்லா நட்சத்திரங்களுக்கும் ஊக்கம் கொடுப்பது செய்தி தாள்களும், ஊடகமும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

நான் படங்கள் தேர்வு செய்து நடிக்கும்போது எனக்கு இந்த வேடம் பொருத்தமாக இருக்கிறது. இப்படி நடித்திருக்க வேண்டும் என்றெல்லாம் சுட்டிக்காட்டி நல்ல முறையில் வழி நடத்தி இருபக்கமும் வேலி போட்டு என்னை வளர்த்து வருகிறீர்கள். ஆனால் சிலர் ஏதோ காரணத்தால் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.

நான் நடக்கும் பாதையில் எனக்கு வேலி போட்டு தவறான கதைகளை தேர்வு செய்யாமல் பார்த்துக்கொள்ளும் நீங்களே நான் நடக்கும் பாதையில் முள் போட்டு தடுத்துவிடாதீர்கள் என்றார்.உடனிருந்த லிங்குசாமி கூறும்போது, ‘வெளிப்படையாகவே ஒரு கருத்தை சொல்கிறேன். அஞ்சான் படத்தைபற்றி பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் விரும்பத்தகாத விமர்சனங்களை வெளியிட்டிருக்கின்றனர்.

அது அவரவர் உரிமை. ஆனால் படத்தைகூட பார்க்காமல் பலர் யாரோ சொல்வதை கேட்டு அல்லது கற்பனையாக யூகம் செய்து கருத்துக்கள் போடுகின்றனர். இப்படத்தை பொறுத்தவரை நான் சூர்யாவை எப்படி கையாள வேண்டும் என்று நினைத்தேனோ, அதை சரியாக செய்திருக்கிறேன். அதை தியேட்டரில் சென்று பார்த்தபோது உணர்ந்துகொண்டேன் என்றார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies