பொது அறிவு -2
-----------------------------
Ø ‘பை’ என்ற ஆங்கிலப்படத்தில் தாலாட்டு பாடி இந்திய பெண்மணி யார்? -பம்பாய் ஜெயஸ்ரீ
Ø மராட்டிய மாநிலத்தின் அரசுப்பறவை எது? -மஞ்சள் நிற கால்களையுடைய பச்சைப்புறா
Ø 2013 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மிக உயரமான காந்தி சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையின் உயரம் மற்றும் அது அமைந்துள்ள இடம் எது? - 70 அடி, பாட்னா
Ø கை விளக்கு காரிகை என்றழைக்கப்படும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தனது சட்டையில் அணிந்திருந்த பெயர் பலகையில் என்ன வாசகம் குறிப்பிடப்பட்டு இருந்தது? - ஏதெனா
Ø லில்லிபுட் மற்றும் குலிவர் கதையில் வரும் கதாபாத்திரமான லில்லிபுட் நகரத்திற்கு குலிவர் பயணம் செய்த கப்பலின் பெயர் என்ன? – ஆன்டிலோப்
Ø பழங்காலத்தில் அவந்திகா என்று அழைக்கப்பட்ட நகரத்தின் இன்றைய பெயர் என்ன? - உஜ்ஜைனி
Ø இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், முதல் பட்ஜெட் உரையை தாக்கல் செய்தவர் யார்?- ஆர்.கே.ஷண்முகம் செட்டியார்
Ø அலிபாவும் 40 திருடர்களும் கதையில் வரும் அலிபாபாவின் சகோதரர் பெயர் என்ன? – காசிம்
Ø கோள்களில் மிகவும் சூடான கோள் எது? – வீனஸ்
Ø அதுல் கோச்சார் என்பவர் யார்? - இந்தியாவில் பிறந்து லண்டனில் வசித்து வரும் புகழ்பெற்ற சமையல் கலைஞர்.
