இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்த பிறகு பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் அதிகம் ஃபாலோ செய்யப்படும் அரசியல்வாதிகளில் மோடி 2 வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்ளார்.
பேஸ்புக்கில் மோடி பக்கத்துக்கு 21 மில்லியன் லைக்குகளும், ஒபாமாவுக்கு 42.4 மில்லியன் லைக்குகளும் உள்ளது. டிவிட்டரில் ஒபாமாவுக்கு 46 மில்லியன் ஃபாலோவர்ஸும், மோடிக்கு 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸூம் உள்ளார்கள். ஒபாமாவின் பதவி காலம் விரைவில் முடிந்து விடும் பட்சத்தில் மோடி ஒபாமாவை முந்தி முதல் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

