BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 12 November 2024

`கருணாநிதிக்கு பேரனாக இல்லாமல் இருந்தால், கவுன்சிலர் தேர்தலில்கூட..!'- உதயநிதியைச் சாடும் உதயகுமார்

"எடப்பாடியாருக்கு சவால் விடும் அளவிற்கு உதயநிதிக்கு தகுதியும், அனுபவமும் இன்னும் வரவில்லை..." என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மாவட்டம் தோறும் ஆய்வுக் கூட்டம் என்கிற பெயரிலே முதலமைச்சர் போட்டோ ஷூட், ரோடு ஷோ நடத்தி வருவது தமிழக மக்களுக்கு பலன் தரவில்லை. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி மக்களுக்காக கேள்விகளை முன் வைக்கின்றபோது அதை கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டுமே தவிர, எள்ளி நகையாடுவதும் வரம்பு மீறி பேசுவதும் நாகரிக அரசியல் அல்ல.

எடப்பாடி பழனிசாமி ஆதாரத்தோடு வைக்கிற குற்றச்சாட்டுகளை பொய்  என்று திசை திருப்புவதில்தான் அக்கறை செலுத்துகிறார்களே தவிர தீர்வு காண்பதற்கான அக்கறை செலுத்தவில்லை.

  அரசு செலவில் செயல்படுகின்ற திட்டங்களுக்கு தொடர்ந்து உங்கள் தந்தையார் பெயரை சூட்டுகிறீர்கள், உங்கள் டிரஸ்ட் மூலமாக திட்டங்களுக்கு பெயரை வைக்க ஆட்சேபனை இல்லை, ஆனால் மக்கள் வரிப் பணத்தில் உங்கள் தந்தையார் பெயரை தொடர்ந்து சூட்டுவதால் மக்கள் முகம் சுழிக்கிறார்கள் என்று மக்களின் எண்ணத்தைத்தான் எடப்பாடியார் கேட்டுள்ளார்.

ஆர்.பி.உதயகுமார்

முன்வைத்த அந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதற்கு திக்கி திணறி போன மு.க.ஸ்டாலின், உங்களுக்கு என்ன திறமை இருக்கிறது என்று தரம் தாழ்ந்த கேள்வியை கேட்டதற்கு, கடந்த நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்து மக்களுக்கு செய்த திட்டங்களான ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 புதிய மாவட்டங்கள், குடிநீர் திட்ட பணிகள், கால்நடை பூங்காக்கள், சாலை பணிகள், 7.5 சதவிகித இட ஒதுக்கீடு, குடிமராமத்து திட்டங்கள், 50 ஆண்டுக்கால காவேரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு, மேட்டூர் அணை தூர் வாருதல், ஜெயலலிதாவின் திட்டங்களான தாலிக்கு தங்கம் திட்டம், கறவை மாடு ஆடுகள் திட்டம், மடிக்கணினி திட்டம், தடுப்பணை கட்டி அதன் மூலம் நீர்நிலை உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை புள்ளி விவரத்துடன் துண்டு சீட்டு இல்லாமல், குறிப்பு இல்லாமல் என்னால் பேச முடியும், முதலமைச்சர் செய்த திட்டங்களை பேசத் தயாரா? என்று எடப்பாடியார் சவால் விடுத்தார்.

ஆனால், இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் எடப்பாடியாரை பார்த்து சவால் விடுகிறார், இரண்டு கோடி தொண்டர்கள் சார்பில் நான் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன். முதலமைச்சர் ஸ்டாலின் மகனான உங்களோடு விவாதிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்... நீங்கள் எந்த இடத்திற்கு அழைத்தாலும் நாங்கள் வரத் தயார்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை, போதைப் பொருள் கடத்தல், மின்சார கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, என மக்கள் வடிக்கிற கண்ணீரை துடைப்பதற்கு நீங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கருணாநிதிக்கு மகனாக பிறந்ததால் முதலமைச்சராகவும், கருணாநிதியின் பேரனாக பிறந்த ஒரே காரணத்தினால் நீங்கள் துணை முதலமைச்சராகி இன்று சவால் விடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

கருணாநிதிக்கு பேரனாக இல்லாமலிருந்தால், ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட நீங்கள் வெற்றி பெற முடியாது என்று கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை பட்டவர்த்தமாக கூறி உங்கள் முகத்திரையை ஒரே வார்த்தையில் தோலுரித்துக் காட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடியாருக்கு சவால் விடும் அளவிற்கு உதயநிதிக்கு தகுதியும், அனுபவமும் இன்னும் வரவில்லை. சவால் விடுவது முக்கியம

ல்ல, மக்களை காப்பதுதான் முக்கியம் என்பதை உதயநிதி நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies