BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 28 January 2025

வனவிலங்கு வேட்டையில் இளைஞர் சுட்டுக் கொலை... யானை தாக்கி உயிரிழந்ததாக நாடகம்.. 13 பேர் கைது!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை 3- ம் டிவிஷன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜம்ஷித் என்பவர் கடந்த சனிக்கிழமை அதிகாலை யானை தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனை விசாரித்த வனத்துறையினர், யானை தாக்கியதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இளைஞர் இறப்பில் மர்மம் இருப்பதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். சந்தேக மரணமாக வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஜம்ஷித்

இந்நிலையில், ஜம்ஷித் மற்றும் அவரின் கூட்டாளிகள் சிலர் நள்ளிரவில் வனவிலங்கு வேட்டையாட சென்ற போது துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் அவர் உயிரிழந்ததை கண்டறிந்துள்ளனர். மேலும், துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட இளைஞரை‌ யானை தாக்கி உயிரிழந்ததாக நாடகமாடியதையும் உறுதி செய்துள்ளனர். இந்த குற்றச் செயலில் ஈடுபட்டதாக மொத்தம் 13 நபர்களை கைது செய்துள்ளனர். சட்டவிரோத நாட்டு துப்பாக்கி, தோட்டாக்கள், வெடி பொருட்கள், வாகனங்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், " ஜம்ஷித் உள்ளிட்ட 5 பேர்‌ கடந்த 24 - ம் தேதி இரவு சட்டவிரோத நாட்டு துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு வன விலங்கு வேட்டைக்குச் சென்றுள்ளனர்.

அப்போது போது‌ ஜம்ஷித் வயிற்றில் குண்டடிப்பட்டு இறந்துள்ளார். அவருடன் வேட்டைக்குச் சென்ற‌ 4 பேர் தலைமறைவாகினர். தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில்,

வேட்டைக்கு பயன்படுத்திய பொருட்கள்

வேட்டைக்குச் சென்ற நவ்சாத், ஜாபர் அலி, ஐதர்அலி, சதீஷ், ஆகியோரை முதல் கட்டமாக கைது செய்தோம் . மேலும் அவர்களுக்கு உதவிய, ரபிக், உஸ்மான், ஜினேத், அன்வர், ஜெம்ஷித், சபீக், ஜெஷிம், அன்ஷாத், சாதிக் அலி என மொத்தம் 13 நபர்களை கைது செய்துள்ளோம். பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies