BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 29 January 2025

சிறுவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ்; `ஐடியா கொடுத்தவர் பணம் கேட்டு மிரட்டல்' -4 பேர் கைது, நடந்தது என்ன?

சென்னையை சேர்ந்த யூடியூபர் சித்ரா, கடந்தவாரம் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தஞ்சாவூரை சேர்ந்த யூடியூபர் 'திவ்யா கள்ளச்சி' என்பவர்‌ சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார். இந்த விஷயம் பரபரப்பானது. தொடர்ந்து, சித்ரா அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திக்கோரி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சென்னை டி.ஜி.பி. அலுவலகம் உத்தரவிட்டது.

சித்ரா

அதன்பேரில், பாலியல் சீண்டல் நடைபெற்றதாக புகாரில் கூறப்பட்ட ஸ்ரீவில்லிப்புத்தூர் சரகத்தில் போலீஸாரும், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.

இதில் தஞ்சாவூரை சேர்ந்த திவ்யா கள்ளச்சி, அவரின் நண்பரான ஈரோட்டை சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரும் சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறும்போது, 'ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு யூடியூப் 'ரீல்ஸ்' எடுப்பதற்காக திவ்யா கள்ளச்சி, கார்த்திக் மற்றும் ஹவுசிங் ஃபோர்டு காலனியை சேர்ந்த வீடியோகிராபர் ஆனந்த்ராமன்‌ ஆகியோர் வந்துள்ளனர்.

இதை அறிந்த சித்ரா, அப்பகுதியில் தொண்டு நிறுவனத்தில் உள்ள சிறுவர்களிடம், திவ்யா பாலியல் சீண்டல் செய்வதுபோல் வீடியோ எடுத்து அனுப்புங்கள் எனக்கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி அப்பகுதியில் உள்ள தொண்டு நிறுவன சிறுவர்களிடம், திவ்யா கள்ளச்சி பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்று வீடியோ எடுத்துள்ளனர்.

கார்த்திக்

இந்த வீடியோவை சித்ராவுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து வீடியோவை ஆதாரமாக வைத்துக்கொண்டு திவ்யா கள்ளச்சியிடம், சித்ரா பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், திவ்யா கள்ளச்சியிடம் பணம் பறிப்பதற்காகவே, இது மாதிரியான வீடியோக்களை எடுக்க சொல்லி சித்ரா ஐடியா கொடுத்ததும் தெரியவந்தது.

ஆனந்த்

இதையடுத்து சிறுவர்களிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு ஆபாச வீடியோ எடுத்ததாக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் குழந்தைகள்‌ பாதுகாப்பு நல அதிகாரிகள் புகார்‌ அளித்தனர். இதைத்தொடர்ந்து, ஆக்ஷனில் இறங்கிய‌ போலீஸார், திவ்யா கள்ளச்சி, சித்ரா, கார்த்தி, ஆனந்த் ராமன் ஆகியோர் மீது போக்சோ உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்" என்றனர்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies