தென்கிழக்கு இங்கிலாந்து நாட்டின் Oxfordshire என்ற பகுதியில் உள்ள Didcot A Power Station என்ற இடத்தில் இருந்து மூன்று பெரிய கூலிங் டவர்களை வெடிவைத்து ஒருசில வினாடிகளில் இடிக்கப்பட்டது. சில வினாடிகளில் மூன்று பெரிய டவர்களும் மாயமாக மறைந்துபோனதை நூற்றுக்கணக்கானோர் நேரில் பார்த்தனர்.இங்கிலாந்து நாட்டில் உள்ள Didcot A Power Station கோபுரங்களை எடிக்க அதன் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன் ஆயுட்காலம் முடிந்துவிட்டதால் அதை அழிக்க முடிவு செய்த அதிகாரிகள் அதற்காக 180 கிலோ வெடிபொருட்களை பயன்படுத்தினர். சுற்றுப்புறத்திற்கு மாசு ஏற்படதாவாறு அந்த மூன்று கோபுரங்களும் இடிக்கப்பட்டது.
36000 டன் எடையுள்ள அந்த இமாலய கோபுரங்கள் ஒரு நிமிடத்திற்கு இடிந்து தரைமட்டமாகியது. இந்த அதிசய காட்சியை காண, அந்த பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர்.ஒன்றன்பின் ஒன்றாக மூன்று கோபுரங்களும் இடிந்துவிழும் காட்சி வீடியோ எடுக்கப்பட்டு அதை கோடிக்கணக்கானோர் பார்த்தும், பகிர்ந்தும் வருகின்றனர்.
