BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 27 July 2014

தமிழில் படம் தயாரிக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்

இந்தியை தொடர்ந்து தமிழில் சொந்தப் படம் தயாரிக்கிறார், ஏ.ஆர்.ரகுமான். இதுகுறித்து அவர் கூறியதாவது: பிசியான இசைப் பணிகளுக்கு இடையே, சொந்தப் பட நிறுவனம் சார்பில் இந்தியில் ஒரு படம் தயாரிக்கிறேன். அதற்கு நானே கதை எழுதியுள்ளேன். உலக வாழ்க்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் அனுபவங்கள், பயணங்களின்போது சந்திக்கும் மனிதர்கள், நாம் செல்லும் பாதைகள்தான் புதுப்புது கதைகள் பிறக்க  காரணமாகிறது. என் சிந்தனையிலும் பல கதைகள் உருவானது. அதிலிருந்து ஒரு சிறந்த கதையை தேர்வு செய்து, அதை படமாக உருவாக்க முடிவு செய்துள்ளேன்.

படத்தின் இயக்குனர் தேர்வு முடிந்து விட்டது. விரைவில் அதை அறிவிப்பேன். 20 வயது நிரம்பிய ஒரு இளம் புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். இந்தியில் படம் உருவாக்குவதற்காக இந்தக் கதையை முதலில் தேர்வு செய்ததில் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. அது தற்செயலாக அமைந்து விட்டது. இந்தியைத் தொடர்ந்து தமிழிலும் படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். முதற்கட்டமாக 2 படங்கள் தயாரிக்கிறேன். படம் இயக்குவது என்பது மிகப் பெரிய பொறுப்பு. அதனால், அந்த துறையில் ஈடுபடும் எண்ணம் இல்லை.  


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies