மகாராஷ்டீரா மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து
வருகிறது.இதனால் மகாராஷ்டீரா மாநிலம் முழுவதும் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி
வருகின்றன.
இந்நிலையில் டிட்வாலாவில் உள்ள காலு நதியில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
ஆற்றின் குறுக்கே உள்ள ரைத்தா மேம்பாலத்தின் மேலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நதியில் தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அந்த பாலத்தின் வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.
மும்பையில் நேற்று பெய்த கன மழையால் சாலைகளில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த பகுதிகளில் தீயணைப்பு படையினர் சென்று மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.
இது குறித்து மும்பை வானிலை மைய அதிகாரி கூறியதாவது;
மும்பை அதன் சுற்றுபுறங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்க்குள் கன மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என்று தெரிவித்தார்.
மும்பையில் நேற்று பெய்த மழையின் அளவு 102 மி.மீ ஆக பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.