BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Tuesday, 15 July 2014

பேஸ்புக்கில் 50,000 லைக்கை அள்ளிய லிப்ஸ்டிக் ஓவியம் (Photos)

முகநூலில் (ஃபேஸ்புக்) விதவிதமான ஸ்டேட்டஸ், போட்டோக்களை போட்டு லைக்கை குவிக்க வித்தியாசமான முயற்சிகளில் உலகில் பலர் இறங்கி இருக்கிறார்கள். இதில் வாஷிங்டனில் வசித்து வரும் ஹலினி மெல்தா (Helene Meldahl) என்ற பெண் தனது வீட்டில் உள்ள பாத்ரூம் கண்ணாடியில், லிப்ஸ்டிக்கை மட்டுமே பயன்படுத்தி வித்தியாசமான ஓவியம் தீட்டி, அதில் செல்பி போட்டோ எடுத்து லைக்கை அள்ளி வருகிறார்.



அந்த நாட்டில் இருக்கும் சில முக்கிய வி.ஜ.பி.க்களே இவருக்கு ஃபாலோயர்களாக உள்ளனர் என்பதுதான் இதில் கூடுதல் ஹைலைட். இதுவரை இந்த அம்மணிக்கு 50,000 ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.
‘‘இன்னும் பல லட்சம் ஃபாலோயர்களை சம்பாதிக்கும் வரை எனது போட்டோ போடுவதை நிறுத்த மாட்டேன்’’ என சபதம் போடும் ஹலினி, இந்த ஐடியா தனக்கு எப்படி வந்தது என்பதையும் சொல்கிறார்.

‘‘நான் சும்மா இருக்கும்போது போட்டோ பிடிப்பது வழக்கம். எனக்கு 26 வயசு ஆகிடுச்சு, ஆனா வேலை கிடைக்கலை. அதனால் வீட்டில் பொழுதுபோகாமல் வீடியோ கேம் விளையாடுவேன். அதை அப்படியே எங்கள் வீட்டில் பாத்ரூமில் ஓவியமாக தீட்டி புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக், டுவிட்டரில் போட துவங்கினேன். அதில் வந்த வரவேற்பை பார்த்து எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

இதை பார்த்த பல முன்னனி டிசைன் கம்பெனிகள் வேலைக்கு சேரும்படி அழைத்து இருக்கிறார்கள். ஜாலியாக ஆரம்பித்த இந்த முயற்சி, இறுதியில் எனக்கு பல லட்சம் சம்பளத்தில் வேலையும் வாங்கி கொடுத்துவிட்டது. ஆனாலும் இன்னும் விதவிதமான ஓவியங்கள் என் ஃபாலோயர்களுக்காக காத்திருக்கிறது” என்கிறார் ஹலினி மெல்தா.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies