நாக்அவுட் சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத மெஸ்ஸிக்கு எதற்கு சிறந்த வீரர் விருது என ரசிகர்கள் கண்டபடி திட்டிவருகின்றனர்.
பிரேசிலில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அந்த தொடரில் சிறந்த வீரராக மெஸ்ஸி தெரிவு செய்யப்பட்டு கோல்டன் பால் விருது வழங்கப்பட்டது.
அர்ஜென்டினா அணி 1986க்குப் பின் மீண்டும், உலகக்கிண்ணம் வெல்ல வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த வாய்ப்பை தவறவிட்டது. லீக் சுற்றில் 4 கோல் அடித்து அசத்திய அர்ஜென்டினா அணித்தலைவர் மெஸ்ஸி, இதன் பின் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
அதே போல் மெஸ்ஸி பிபா தரவரிசையில் டாப் 10 வரிசையில் கூட இடம் பிடிக்கவில்லை. ஆனால் அவருக்கு சிறந்த வீரர் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பல ரசிகர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று மெஸ்ஸியை தன் வாரிசு எனக் கூறிவரும் முன்னாள் அர்ஜென்டினா அணியின் அணித்தலைவர் மாரடோனா கூட மெஸ்ஸி விருதுக்கு தகுதியற்றவர் என்று கூறியிருந்தார்.
மெஸ்ஸிக்கு விருது கொடுத்தது முட்டாள் தனமானது, இவருக்கு விருது என்பது மிகப்பெரிய ‘ஜோக்’ தான், முல்லர், ரோட்ரிக்ஸ், ராபென் இருக்க, மெஸ்ஸிக்கு விருதா, என்ன ஒரு நகைச்சுவையான முடிவு என்று பலரும் தங்கள் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.