BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 16 July 2014

5 வயது குழந்தைக்கு ஈவு இரக்கமின்றி கன்னத்தில் சூடு வைத்த தாய்: கைது!

அப்பம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் சமயல் கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து சூடாக்கி, தனது 5 வயது மகளின் கன்னத்திற்கும் உதடுக்கும் சூடு வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் இரக்கமற்ற தாயை குருவிட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி எரத்ன கிராமிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். சிறுவர் மற்றும் பெண்களுக்கான பணியகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர், எரத்ன தெற்கு அடவிகந்தவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த எசல போய தினத்தன்று சந்தேக நபரான சிறுமியின் தாய், அப்பம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் கரண்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தனது மகளின் வலது கன்னம், உதடு மற்றும் வலது கைக்கு சூடு வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் தான் 7 மாதங்களுக்கு முன்னர் வெலிமடையில் இருந்து வந்ததாகவும் எரத்னவில் உள்ள ஒரு தனியார் தேயிலை தொழிற்சாலையில் தொழில் புரிவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது மகள் முறைகேடான சொற்களை பிரயோகித்து பேசியதற்கு தண்டணையகவே இவ்வாறு சூடு வைத்ததாக மேலும் தெரிவித்துள்ளார். சந்தேக நபர் சட்டரீதியாக திருமணம் முடிக்காதவர் என்றும் இத்தனை காலம் வாழ்ந்த ஒருவருடன் 5 குழந்தைகளுக்கு தாயானதாகவும் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற தனது மகளுக்கு சுடுநீர் பட்டதாலேயே பாதிக்கப்பட்டுள்ளார் என்று சந்தேக நபரான தாய் வைத்தியசாலை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி மற்றும் அவரது சகோதரிகள் அனைவரும் வேறுபட்ட மூன்று சிறுவர் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் பரிசோதகருமான ஆர்.பி.சிறிவர்தன மேற்கொண்டு வருவதாகவும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies