BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 16 July 2014

சிம்பு- நயன்தாரா தம்பதியினரை பிரிக்கும் கள்ளக்காதலி டாப்சி.

கடந்த 2006ஆம் ஆண்டு சிம்பு- நயன்தாரா நடித்து வெளியான வல்லவன் படத்திற்கு பின்னர் எட்டு வருட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடித்து வரும் திரைப்படம் 'இது நம்ம ஆளு'. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கிவருகிறார். முதலில் காதலர்களாகவும், பின்னர் தம்பதிகளாகவும் நடிக்கும் சிம்பு -நயன்தாரா, ஏற்கனவே உண்மையான காதலர்களாக இருந்து பிரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தில் நயன்தாராவை தவிர இன்னொரு நடிகையும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிம்பு-நயன்தாரா ஜோடியின் வாழ்க்கையை பிரிக்கும் கள்ளக்காதலி வேடத்தில் நடிக்கிறார் நடிகை டாப்சி. படத்தில் வெறும் பத்து நிமிடங்களே டாப்சியின் காட்சிகள் வருவதாகவும், அந்த கேரக்டர்தான் கதையின் திருப்புமுனைக்கு காரணமாக இருக்கும் கேரக்டர் என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

ஆரம்பம் படத்திற்கு பின்னர் தமிழில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் டாப்சி, ஏற்கனவே இதேபோன்ற ஐஸ்வர்யா தனுஷ் இயக்குமர் 'வை ராஜா வை' என்ற படத்திலும் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்கள் தவிர நீண்டகாலமாக தயாரிப்பில் உள்ள ராகவா லாரன்ஸின் முனி 3 படத்திலும் டாப்சி நடித்து வருகிறார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies