BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 30 July 2014

கும்பகோணம் பள்ளி நிறுவனருக்கு 940 ஆண்டுகள் சிறைத்தண்டனை? அதிரடி தீர்ப்பு.

கடந்த 2004ஆம் ஆண்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த தீ விபத்தில் பிஞ்சுக்குழந்தைகளான 94 பேர் பரிதாபமாக உடல்கருகி மரணம் அடைந்தனர். இந்த வழக்கு பத்தாண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்புடன் முடிவுக்கு வந்துள்ளது. பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு 10 வருட சிறைத்தண்டனையும், அவருடைய மனைவியும் பள்ளி தாளாளருமான சரஸ்வதிக்கு ஐந்து ஆண்டுகளும் சிறை தண்டனையும் விதித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கும்பகோணத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜுலை 16ஆம் தேதி  ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப்பள்ளி என்ற பள்ளியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. பள்ளியின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் பல மாணவர்கள் வெளியே வர முடியாமல் பள்ளியில் தீக்கிரைக்கு ஆளாகி பலியாகினர்.  இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 24 பேர்களில் 3 பேரை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்தது. மீதியுள்ள 21 பேர்களில் 11 பேர்கள் இன்றைய தீர்ப்பின்மூலம் விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் என உறுதிசெய்யப்பட்ட 10 பேர்களுக்கும் நீதிபதி இன்று மதியம் தண்டனை விபரங்களை அறிவித்தார். அதன்படி பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையுடன் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.51 லட்சம் அபராதமும், அவரது மனைவியும் பள்ளியின் தாளாளருமான சரஸ்வதிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதில் பள்ளி நிறுவனரால் 94 குழந்தைகள் பலியாகியுள்ளதால் ஒரு குழந்தைக்கு 10 ஆண்டுகள் என கணக்கு செய்து நீதிபதி 940 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளார். ஆனால் இந்த 94 பத்து ஆண்டுகளையும் அவர் ஏக காலத்தில் அனுபவிக்க இருப்பதால் அவர் மொத்தம் பத்து ஆண்டுகள் சிறையில் இருந்தால் போதுமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளி தலைமையாசிரியை சந்தானலட்சுமி மற்றும் நான்கு அரசு அலுவலர்கள் உள்பட 7 பேருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், பள்ளியின் கட்டட பொறியாளர் ஜெயசந்திரனுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் மற்றும் தலா ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் அபராதமும் விதி்த்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், அபராதத் தொகையில் தலா ரூ.50 ஆயிரத்தை குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், படுகாயம் அடைந்த 15 பேருக்கு தலா 25 ஆயிரமும், சாதாரண காயம் அடைந்த 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies