டெல்லியில் வசிக்கும் தாயும் மகனும் பால் வாங்குவதற்காக அங்குள்ள
மார்க்கெட் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது பின்புறமாக வந்த
எலக்ட்ரிக் ஆட்டோ ஒன்று அச்சிறுவன் மீது மோதியதில் அவன் அண்டாவில்
கொதித்துக்கொண்டிருந்த சர்க்கரை பாகில் போய் விழுந்துவிட்டான்.
இதை கண்டு பதறிய தாய் கொதிக்கும் சர்க்கரை பாகில் தனது கைகளை விட்டு மகனை தூக்கினார். இதனால் தாயின் கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சிறுவனை அருகிலுள்ள லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டான். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சிறுவன் தேவ் உயிரிழந்தான். கைகளில் காயமடைந்த தாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவத்திற்கு காரணமான ரிக்சா டிரைவர் சம்பவ இடத்தில் ரிக்சாவை விட்டு விட்டு ஒடிவிட்டான். மயூர் விகார் போலீஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.