BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 27 July 2014

காதலிக்காக அலையும் அண்ணன், தம்பி

கிருஷ்ணா, மா.கா.பா.ஆனந்த், மோனல் கஜ்ஜார், சந்தானம், சவுகார் ஜானகி உட்பட பலர் நடிக்கும் படம், வானவராயன் வல்லவராயன். டாக்டர் எல்.சிவபாலனின் ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட் வழங்க, மகாலட்சுமி மூவீஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு, பழனிகுமார். இசை, யுவன்சங்கர்ராஜா. படத்தை இயக்கியுள்ள ராஜமோகன் கூறியதாவது: பாசமாக இருக்கும் அண்ணன், தம்பிகள் கிருஷ்ணா, மா.கா.பா.ஆனந்த். சகோதரர்கள் என்றால் இவர்களைப் போல் இருக்க வேண்டும் என்று சொல்லி முடிப்பதற்குள், ஒருவரை ஒருவர் அடித்து வீழ்த்துவார்கள்.

 இங்கே சென்று எமது இணையத்தை பார்வையிடலாம் 

14 முறை தோற்ற கஜினி முகமதுவையே மிஞ்சும் அளவுக்கு தன் காதலில் 30 முறை தோற்ற கிருஷ்ணாவுக்கும், ஒருத்தி கூட தன்னை திரும்பிப் பார்க்கவில்லையே என்று ஏங்கும் மா.கா.பா.ஆனந்துக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் கதை. இதற்கிடையே மோனல் கஜ்ஜாரின் காதல், வயதான சவுகார் ஜானகியின் அலுச்சாட்டியம் என காமெடியின் உச்சமாக படம் இருக்கும். விரைவில் திரைக்கு வருகிறது.  


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies