BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 27 July 2014

தமிழகத்தில் முதன்முறையாக ஏடிஎம் போல் பள்ளிகளில் நாப்கின் மெஷின்: வேலூர் பெண் கைதிகள் ஏற்பாடு

வேலூர்: தமிழகத்தில் முதல்முறையாக வேலூர் பெண்கள் சிறை  கைதிகள் ஏடிஎம் இயந்திரம் போல் நாப்கின் எடுக்கும் இயந்திரங்களை  உருவாக்கியுள்ளனர். தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகள்  குற்றவாளிகளை தண்டிக்கும் தண்டனை கூடமாக மட்டும் அல்லாமல்,  அவர்களின் புத்தியை கூர்மைப்படுத்தும், பட்டறைகளாகவும் உள்ளன.   இன்றைக்கு மாநிலத்தில் உள்ள எல்லா சிறைகளிலும் தொழிற் கூடங்கள்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளியாக சிறைக்கு செல்லும் கைதிகள்,  தண்டனை காலம் முடிந்து வெளியே செல்லும்போது ஒரு  கைத்தொழிலை கற்றுக்கொண்டவர்களாகவே செல்கின்றனர். வேலூரில்  ஆண்கள் சிறையில் விவசாயம், காவல் துறைக்கு தேவையான புட்வேர்,  உணவு பொருட்கள் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இதேபோல்,  பெண்கள் சிறையில் புடவை ஜரிகை, கைவினை பொருட்கள், அரிசி  வத்தல், மிளகாய் வத்தல், ஜவ்வரிசி வத்தல், ஊறுகாய் உள்ளிட்ட  உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. பெண்கள் சிறையில்  நன்னடத்தை கைதிகளான சுமார் 12 பேரை கொண்டு நாப்கின்கள்  தயாரிக்கப்படுகிறது. தமிழகத்திலேயே முதல் முறையாக வேலூர்  பெண்கள் சிறை வளாகத்தில் நவீன தொழில்நுட்ப இயந்திரத்தை  கொண்டு கடந்த 4 மாதங்களாக நாப்கின்கள் தயாரிக்கப்படுகிறது.

இதுவரை 21 ஆயிரம் நாப்கின்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான  மூலப்பொருட்களை தனியார் தொண்டு நிறுவனங்கள் வழங்கி வருகிறது.  தயாரிப்பு இயந்திரமும் தனியார் அமைப்பால் வழங்கப்பட்டுள்ளது. இங்கு  தயாரிக்கப்படும் நாப்கின்களை அரசு பள்ளிகளில் மாணவிகளின்  தேவைக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளி  வளாகத்திலேயே ஏடிஎம் இயந்திரத்தைபோல நாப்கின்களை எடுக்கும்  இயந்திரம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. எப்படி ஏடிஎம்  இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்க முடியுமோ, அதைப்போலவே  நாப்கின்களையும் இயந்திரத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். இந்த  நாப்கின் எடுக்கும் இயந்திரங்கள் சோதனை அடிப்படையில் விரைவில்  வேலூரில் உள்ள சில அரசு பள்ளிகளில் வைக்கப்பட உள்ளது. இந்த  இயந்திரங்களை வழங்க சில தனியார் அமைப்புகள் முன்வந்துள்ளன.  மாணவிகளின் வசதிக்காக குறைந்த விலையில் நாப்கின்கள் விற்பனை  செய்யப்பட உள்ளது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில்,  பெண்கள் சிறையில், தனியார் அமைப்புகளின் உதவியுடன் நாப்கின்  தயாரிப்பு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது.

சிறையில் தயாரிக்கப்படும் நாப்கின்களை குறைந்த விலையில்  விற்பனை செய்யும் வகையில், 3 ரூபாய்க்கு 2 நாப்கின் பாக்கெட்டுகள்  கிடைக்கும். இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நவீன இயந்திரத்தில் 2  ரூபாய் நாணயம் மற்றும் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டால்  நாப்கின்கள் வெளியே வரும். இந்த இயந்திரங்கள் பொதுமக்களும்  பயன்படுத்தும் வகையில் பள்ளிகளின் அருகில் அமைக்கப்படும்.  குறிப்பிட்ட எண்ணிக்கையில் நாளொன்றுக்கு அந்த இயந்திரத்தில்  நாப்கின்கள் இருப்பு வைக்கப்படும். காலியான பிறகு, சிறை  நிர்வாகத்தால் மீண்டும் நிரப்பப்படும். மாணவிகளின் நலனில் அக்கறை  கொண்டும், சிறைவாசிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவும்  இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது இவ்வாறு அவர்கள்  கூறினர்.

அரசுக்கு 1 ரூபாய் கூட செலவு இல்லை

வேலூர் பெண்கள் சிறை நிர்வாகம் எடுத்துள்ள இந்த புதிய முயற்சிக்கு  சிறை நிர்வாகம் தமிழக அரசுக்கு ஒரு ரூபாய் கூட செலவு  வைக்கவில்லை. தயாரிப்பு இயந்திரம் முற்கொண்டு நாப்கின்  மூலப்பொருட்கள், நாப்கினை எடுக்கும் இயந்திரங்கள் வரை அனைத்தும்  தனியார் அமைப்புகளால் வழங்கப்படுகிறது. அரசு நிதி வழங்கவில்லை  என்றாலும் தங்களுடைய முயற்சியை கொண்டு பெண்கள் சிறை  நிர்வாகம் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்தி அதில் வெற்றிபெற  தீவிரம் காட்டி வருகிறது.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies