BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Thursday, 31 July 2014

பிரமாண்டமாக நடந்த அஜீத், த்ரிஷா திருமணம்

கௌதம் மேனன் படத்திற்காக அஜீத், த்ரிஷா திருமணம் செய்து கொள்ளும் காட்சி படமாக்கப்பட்டது.கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வரும் படம் தல 55. இது படத்தின் தற்காலிக தலைப்பு ஆகும். இந்த படத்தில் அஜீத் இரட்டை வேடத்தில் வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் நடந்து வருகிறது. இரவு நேரத்தில் தனது காட்சிகள் படமாக்கப்படவில்லை என்றாலும் அஜீத் படப்பிடிப்புக்கு வருகிறார்.

படத்தில் அஜீத், த்ரிஷா திருமணம் செய்து கொள்ளும் காட்சி வரும். அதற்காக பிரமாண்ட செட் போட்டு திருமணக் காட்சியை படமாக்கினர். சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்கள் முன்னிலையில் திருமணம் நடப்பது போன்று காட்சியாக்கியுள்ளனர்.

கௌதம் படத்தில் அஜீத், த்ரிஷா ஜோடியின் மகளாக மலையாள படமான 5 சுந்தரிகளில் நடித்ததற்காக கேரள அரசின் விருதை பெற்ற அனிகா என்ற குழந்தை நடிக்கிறார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies