BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 20 July 2014

சுனில் நரைன் சூப்பர் ஓவரில் உலக சாதனை (வீடியோ இணைப்பு)

ஐ.பி.எல் போட்டிகளில் தனது சுழலால் அசத்திய சுனில் நரைன் தற்போது சூப்பர் ஓவரில் ’மெய்டன்’ ஓவரை வீசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் போட்டிகள் போலவே மேற்கிந்திய தீவுகள் அணியில் கரீபியன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.,) தொடர் நடத்தப்படுகிறது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரெட் ஸ்டீல் என்ற அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 118 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் என்ற அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 118 ஓட்டங்கள் எடுக்க, போட்டி ‘டிரா’ ஆனது.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் முடிவை தெரிந்து கொள்ள சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. இதில் அதிக ஓட்டங்கள் எடுக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

முதலில் களமிறங்கிய காயானா அணி, ஒரு ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 11 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் 12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கோடு வந்த ரெட் ஸ்டீஸ் அணிக்கு, கயானாவின் சுனில் நரைன் பந்துவீசினார்.

முதல் நான்கு பந்தில் ஒரு ஓட்டங்கள் கூட வழங்காத நரைன், 5வது பந்தில் பூரனை வீழ்த்தினார்.அதே போல் கடைசி பந்திலும் ஒரு ஓட்டங்கள் கூட கொடுக்கவில்லை.

இதனையடுத்து கயானா அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 வரலாற்றில், சூப்பர் ஓவரை ‘மெய்டனாக’ வீசிய முதல் பந்து வீச்சாளர் என்ற புதிய உலக சாதனை படைத்தார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies