விஜய்,சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் பிரமாண்டமாக இயக்கி வரும் கத்தி படத்தை ரிலீஸ் செய்வதில் திடீர் பிரச்சனை உருவாகியுள்ளது. இதனால் 'கத்தி' படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
'கத்தி' படத்தை லைக்கா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவரின் நிறுவனம் என்று கூறப்படுகிறது. லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொலை செய்த ராஜபக்சேவுக்கு நெருக்கமான நண்பர் தயாரித்த 'கத்தி' படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க கூடாது என சவுத் இந்தியன் பிலிம் சேம்பரில், மாணவர்கள் முன்னேற்ற முன்னணி என்ற அமைப்பை சேர்ந்த 20 பேர் மனு கொடுத்துள்ளனர். இவர்களுடைய மனுவை பெற்றுக்கொண்ட சேம்பர் இதுகுறித்து விசாரணை செய்வதாக உறுதியளித்துள்ளனர். சவுத் இந்தியன் பிலிம் சேம்பர் 'கத்தி'க்கு எதிரான நடவடிக்கை எடுத்தால் கண்டிப்பாக இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்படும் என கோலிவுட்டில் அதிர்ச்சியுடன் கூறப்படுகிறது.
ஆனால் மாணவர் முன்னேற்ற முன்னணியின் புகாரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முற்றிலும் மறுத்துள்ளார். லைக்கா நிறுவனத்திற்கும் இலங்கை அதிபருக்கும் எவ்வித வர்த்தக தொடர்போ அல்லது நட்போ இல்லை என்றும், இந்த படத்தின் தயாரிப்பாளரும் ஒரு ஈழத்தமிழர்தான் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனமும் முருகதாஸின் கருத்தை ஆமோதித்துள்ளது. இந்நிலையில் சவுத் இந்தியன் பிலிம் சேம்பர் என்ன முடிவு எடுக்க போகிறது என்பதை படக்குழுவினர் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.