ஒன்றே கால் கோடி தந்தால்தான் கால்ஷீட் என்று பிரபல நடிகருக்கு கண்டிஷன் போட்டார் திரிஷா.நடிகர், தயாரிப்பாளர் தியாகராஜன் தற்போது பிரசாந்த் நடிக்கும் ‘சாஹசம் என்ற படத்தை தயாரிக்கிறார். இதையடுத்து பாலிவுட்டில் கங்கனா ரனவத் நடித்த ‘குயின் என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கி இருக்கிறார். இந்தியில் கங்கனா ரனவத் ஏற்ற வேடத்தை தமிழில் ஏற்க டாப் ஹீரோயின்கள் போட்டிபோடுவதாக தகவல் வெளியானது. ஆனாலும் கால்ஷீட் விஷயத்தில் கறாராக இருக்கிறார்களாம். சமந்தா, திரிஷா, ஹன்சிகா என பல டாப் ஹீரோயின்களில் ஒருவரை நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார் தியாகராஜன்.கங்கனா வேடத்தை ஏற்க திரிஷா பொருத்தமாக இருப்பார் என்று பட குழுவினர் தெரிவித்ததையடுத்து அவரிடம் கால்ஷீட் பெற முயற்சி நடக்கிறது. கதையை கேட்டு பிடித்திருப்பதாக கூறிய திரிஷா தனக்கு சம்பளமாக ஒன்றே கால் கோடி தர வேண்டும் என்று கண்டிஷன் போட்டிருக்கிறாராம். எனவே கால்ஷீட் உறுதி செய்யப்படாமல் பேச்சு பேச்சாகவே இருக்கிறது.
