BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Wednesday, 16 July 2014

டான் ஆப் தி ஏப்ஸ். திரைவிமர்சனம்

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ரைஸ் ஆஃப் தி பிளானெட் ஆஃப் த ஏப்ஸ் என்ற படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள படம்தான் டான் ஆப் தி ஏப்ஸ். மோஷன் கேப்ட்சர் தொழில்நுட்பத்தில் மிகவும் தத்ருபமாக உருவாக்கப்பட்ட குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் சண்டைக்காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றது. கோச்சடையான் படத்தை எடுத்த செளந்தர்யா, இந்த படத்தை கண்டிப்பாக பார்த்து எதிர்காலத்தில் தன் தவறை திருத்திக்கொள்ள வேண்டும்.

குரங்குகளை பரிசோதனை செய்ய வைத்திருந்த கொடுமையான கிருமிகள் உலகில் பரவி மனித இனமே கிட்டத்தட்ட அழிந்துவிடுகிறது. எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்த ஒருசிலர் மட்டும்  கலிபோர்னியாவில் உள்ள இடத்தில் உயிர் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு மின்சார வசதி இல்லை. இந்நிலையில் சீசர் தனது கூட்டத்துடன் வாழும் காட்டுக்குள் சேதமடைந்த அணைக்கட்டில் இருக்கும் நீர்மின்சக்தி இயந்திரத்தை சரியாக இயக்கிவிட்டால் மின்சாரம் கிடைத்துவிடும். இதற்காக மனிதர்கள் காட்டுக்குள் செல்கின்றனர்.

மனித இனமே அழிந்துவிட்டது என சந்தோஷமாக இருந்த குரங்குகள் இனத்திற்கு மனிதர்கள் இன்னும் சிலர் உயிரோடு இருக்கின்றனர் என்று தெரியவருகிறது. மேலும் மின்சாரம் தயாரிக்க அணைக்கு வரும் மனிதர்களை சீசர் எச்சரித்து அனுப்பிவிடுகிறது. ஆனாலும் குரங்குகள் மீது படையெடுத்து மீண்டும் மனிதர்கள் வருவார்கள் என்ற சந்தேகம் சீசருக்கு இருக்கின்றது.

தங்களது முக்கிய தேவைக்கு மின்சாரம் கண்டிப்பாக தேவைப்படுவதால், குரங்குகள் மீது படையெடுத்து அணையை கைப்பற்ற முடிவு செய்கிறார் மனித இனத்தின் தலைவர். ஆனால் அதற்கு முன் சீசருடன் சுமூகமாக பேசி தீர்வு காண சமாதான பேச்சு நடத்த ஒருவர் அனுப்பப்படுகிறார். சமாதானத்திற்கு முதலில் மறுக்கும் சீசர் பின்னர் போர் ஏற்பட்டால் விளையக்கூடிய தீமைகளை எண்ணி அணையில் மின்சாரம் எடுக்க சம்மதம் தெரிவிக்கின்றது. ஆனால் சீசரின் சீசரின் நண்பன் கூபாவுக்கு இதில் துளியும் விருப்பமில்லை.

இந்நிலையில் மனிதர்கள் வாழும் பகுதியில் உள்ள ஒரு இடத்தில், ஆயுதக் கிடங்கில் இருக்கும் பயங்கர ஆயுதங்களை பார்க்கும் கூபா, மனிதர்கள் நம் மீது போர் தொடுக்க தயாராகி வருகின்றனர் என்று தவறாக நினைத்துக் கொள்கிறது. இதனை, சீசரிடம் வந்து கூபா சொல்கிறது.

இறுதியில், குரங்குகள் மின்சாரத்தை எடுக்க சம்மதம் தெரிவித்ததா? கூபா சொன்னது போல் மனிதர்கள் அவர்கள் மீது படையெடுத்தார்களா? அல்லது குரங்குகள் மனிதர்கள் மீது படையெடுத்தனவா? என்பதே மீதிக்கதை.

ஒவ்வொரு காட்சியிலும் பிரமாண்டத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் மாத்தேவ் வாஹன். அதிர வைக்கும் பின்னணி இசையுடன் மிகவும் தத்ருபமான மோஷன் கேப்ட்சர் வேலையும் படம் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றது. கண்டிப்பாக குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய அற்புதமான பொழுதுபோக்கு படம்.



URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies