தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வில்லன்களை அறிமுகப்படுத்துவார். நான் கடவுள் படத்தில் ராஜேந்திரனயும், அவன் இவன் படத்தில் ஆர்.கே அவர்களையும் வில்லனாக அறிமுகப்படுத்தினார். இவர்கள் இருவருக்குமே வில்லன் கேரக்டர்கள் வித்தியாசமான அனுபவத்தை கொடுத்ததோடு ரசிகர்களுக்கும் ஒரு வித்தியாசமான வில்லனை பார்த்த உணர்வு இருந்தது.இந்நிலையில் சசிகுமார், வரலட்சுமி ஆகியோர் நடிப்பில் பாலா இயக்கி வரும் "தாரை தப்பட்டை" படத்தில் பிரபல தயாரிப்பாளர் ஸ்டுடியோ 9 சுரேஷை வில்லனாக்க முடிவு செய்துள்ளார். சுரேஷ் இந்த படத்தில் மேக்கப்பே இல்லாமல் வில்லனாக நடிக்கிறார். இந்த கேரக்டரும் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என இயக்குனர் பாலா கூறியுள்ளார்.
வரலட்சுமி இந்த படத்தில் முதல் பாதியில் கரகாட்ட கலைஞராகவும், இரண்டாவது பாதியில் பாலியல் தொழிலாளியாகவும் நடிக்க இருக்கிறார். இதுவரை தமிழில் வெளிவராத வித்தியாசமான படம் பார்த்த உணர்வு இந்த 'தாரை தப்பட்டை' படத்தை பார்க்கும்போது இருக்கும் என படக்குழுவினர் உறுதியாக கூறுகின்றனர்.
