
After Earth, Men in Black, Bad Boys போன்ற பல ஹாலிவுட் படங்களில் நடித்த முன்னணி நடிகர் வில் ஸ்மித். இவர் தனது ஓய்வு நாளை சந்தோஷமாக கழிக்க ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கடற்கரை சுற்றுலாதலமான இபிசாவு என்ற பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு கடற்கரையில் சூரியக்குளியலுக்காக படுத்திருந்தபோது அவரை அடையாளம் தெரிந்தகொண்ட அவரது ரசிகர்கள் அவரிடம் நெருங்கி வந்து தங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள கோரிக்கை விடுத்தனர்.வில்ஸ் ஸ்மித்தும் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்து வந்தார். இந்நிலையில் அவரை பார்க்க கூட்டம் கூடிவிட்டது. சூரியக்குளியலுக்காக வந்திருந்த ஆண்களும் பெண்களும் உள்ளாடை உடையுன் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஒருசில பெண்கள் மேலாடையின்றியே புகைப்படம் எடுத்தனர். வில்ஸ் ஸ்மித்தும் சிரித்துக்கொண்டே அவர்கள் அனைவருடன் நின்று பொறுமையாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
டாப்லெஸ் பெண்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அமெரிக்க பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாப்லெஸ்ஸுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பெண்களின் வீடுகளில் புயல் வீசுவதாக கூறப்படுகிறது. அவருடன் டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்த ஒரு பெண்ணை அவரது கணவர் விவாகர்த்து செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
