கடந்த வாரம் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தி சரவணன் மீனாட்சி மிர்ச்சி செந்தில்தான். மனைவியாக நடித்தவரையே திருப்பதியில் திருமணம் செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூட்டோடு சூட்டாக அவர் நடித்த படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதுதான் இந்த பப்பாளி.
சாலையோரம் டிபன் கடை நடத்தி வரும் இளவரசுவின் மகன் மிர்ச்சி செந்தில் ஐஏஎஸ் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகின்றார். படிப்புக்கு நடுவே தனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருக்கும் நாயகி இஷாராவை காதலிக்கிறார். இருவருடைய காதலுக்கு இஷாராவின் தாயய் சரண்யாவும் சம்மதம் தெரிவித்து விடுகிறார். ஐ.ஏ.எஸ் தேர்வு முடிந்தது திருமணம் செய்துகொள்ளலாம் என மிர்ச்சி சிவா கூறுகிறர்.
இந்நிலையில் மிர்ச்சி செந்திலின் தந்தை இளவரசு, ஓட்டல் முதலாளியின் எண் ஒருவருக்கு செந்திலை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். தனது மகன் ஓட்டல் முதலாளி பெண்ணை திருமணம் செய்தால் அந்த ஓட்டல் தனது கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும் என்பதற்காகவே இந்த திருமணத்திற்கு இளவரசு வற்புறுத்துகிறார்.
இது தெரிந்த இஷாராவின் பெற்றோர் மிர்ச்சி செந்தில்- இஷாரா திருமணத்தை அவசர அவசரமாக முடித்துவிடுகின்றனர். தனது மருமகனை எப்படியாவது அவர் ஆசைப்பட்டபடி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக்க சரண்யாவும் அவரது கணவரும் முயற்சி செய்ய, திருமணம் நின்றதால் ஓட்டல் கிடைக்காத கோபத்தில் இளவரசு அதை தடுக்க முயல்கின்றார். இறுதியில் செந்திலின் கனவு நிறைவேறியதா? என்பதை கூறியிருக்கிறார் இயக்குனர் ஏ.கோவிந்தமூர்த்தி
மிர்ச்சி செந்தில் அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். சீரியலில் நடித்த அனுபவத்தை வைத்து தனக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துள்ளார்.நடனம், காமெடி, காதல், சென்டிமென்ட் என்று தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.
குடும்பப் பெண்ணாக வரும் நாயகி இஷாரா, நடுத்தர காதல் மற்றும் பாடல் காட்சிகளில் ரசிகர்களை கவர்ச்சியால் கவர்கிறார். நடிப்பும் சுமாராக உள்ளது.
தமிழ் சினிமாவின் சிறந்த அம்மாவாக நடித்து வரும் சரண்யா, முதல்முறையாக நல்ல மாமியாராக நடித்துள்ளார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் வெளுத்து வாங்கும் சரண்யா, நடிப்பில் தனது முத்திரையை வழக்கமாக பதித்துள்ளார்.
சரண்யாவின் கணவராக வரும் நரேன், இளவரசு ஆகியோர்களும் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளாகள். சிங்கம்புலி வரும் காட்சிகளில் காமெடி கலக்கலாக உள்ளது.
ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏற்படும் இயல்பான பிரச்சனைகளை அலசியிருக்கிறார் இயக்குனர் ஏ.கோவிந்தமூர்த்தி. பப்பாளியின் சுவையை தாராளமாக ருசிக்கலாம்.