BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 19 July 2014

ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு வகையான செக்ஸ் உணர்வுகள்

வயதுக்கேற்றார் போல சாப்பிடுகிறோம் அல்லவா. அது போலவே ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு வகையான செக்ஸ் உணர்வுகள், வெளிப்பாடுகள் இருக்கும் என்கிறார் செக் ஸ் குரு டிரேஸி காக்ஸ். செக்ஸ்டஸி என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி யுள்ளார் டிரேஸி. அதில் ஒவ்வொரு வயது க்கேற்ற செக்ஸ் உணர்வுகள், அதற்குரிய வடிகால் கள் உள்ளிட்டவை குறித்து விலா வாரி யாக விளக்கியுள்ளார் டிரேஸி. அதிலி ருந்து சில பகுதிகள்..

20 + வயது…

இந்த வயதில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி செக்ஸ் குறித்த கற்பனை கள், நினைவுகளில் அதிகம் மூழ்கியிருப் பராம். குறிப்பாக ஆண்களை விட பெண் களுக்கே கற்பனை உணர்வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப்பார்களாம். பெண் களில் பலருக்கு செக்ஸை அனுபவித்துப் பார்த்தால் என்ன என்ற யோசனையும் அடிக்கடி வருமாம்.
2006ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 20 வயதைக் கடந்த பெண்களுக்கு, சக பெண்களுடன் படுத்திருக்கும்போது ஆர்கசம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 76 சதவீதம் பெண் களுக்கு இப்படி ஆர்கசம் வருமாம். இதுவே இந்த வயதில் ஆண்களுடன் படு க்கும் பெண்களில் 50 சத வீதம் பேருக்குத்தான் ஆர் கசம் வருமாம். அதாவது நிஜத்தை விட நிழலில் தான் இந்த வயதுப் பெண் களுக்கு செக்ஸ் ஆசை அதிகம் இருக்குமாம். 20 வயதுகளில் உள்ள ஆண் களுக்கும், பெண்களுக்கும் உடலுறவுப் பொசிசன்கள் குறித்து நிறைய ஆர்வம் இருக்குமாம். அதைப் பரீட்சித்துப் பார்க்கும் ஆர்வமும் இருக்குமாம். பத்தில் ஒருவர், தங்களது 20 வயதுகளில் மூன்று பேருடனாவது உறவு வைத்திருப்பார்கள் என்கிறார் டிரேஸி.

30 + வயது…

30 வயதில் வித்தியாசமான சோதனை களை செய்து பார்க்க விரும்புவார்க ளாம் ஆண்களும், பெண்களும். வீட்டு க்குள் வைத் திருந்த செக்ஸை வெளி யிலும் கொண்டு போகத் துடிப்பார்க ளாம்.

பூங்காக்கள், கடற்கரைகள், தோட்டம், இருளான பகுதிகள் என பல்வேறு புகலி டங்களைத் தேடி இவர்களின் செக்ஸ் மனது ஓடுமாம்.

இதுபோன்ற இடங்களில் செக்ஸ் வைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புவார்களாம். அதேபோல ஷவரில் செக்ஸ் வைத்துக் கொள் வது, பாத் டப்பில் வைத்துக் கொள்வது என்று வித்தியாசமாகவும் திங் பண்ணுவார்களாம்.

அதேபோல வார இறுதி நாட்களில் ஜோடியாக சுற்றுவது, கையைப் பிடித்தபடி உலா வருவது, நெருக்கமாக இருப்பது போன்றவற்றி லும் இந்த வயதுக்காரர்களு க்கு ஆர்வம் அதிகம் இருக்கு மாம்.

இந்த வயதில் பெரும்பாலா னோருக்கு குழந்தைகள் வந்து விடும். எனவே அவர்களின் செக்ஸ் ஆசைகள் முன்பு இரு ந்ததைப் போல இல்லாமல் சற்று சுருங்கிப் போயிருக்கு மாம். ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது கணவனும், மனைவியும் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை கூட செக்ஸ் வைத்துக் கொ ள்ளப் பிரியப்ப டுவார்களாம்.

பல பெண்கள் குழந்தை பெற்ற பின்னர் 7 வாரம் வரை லீவு விட்டு விடுவது வழக்கமாக உள்ளது. அதன் பின்னர் மாதாந்திர செக்ஸ் உறவு எண்ணிக்கை 3 அல்லது 4 முறை என்று குறைந்து விடுமாம்.

அதேசமயம், ஒருவரை ஒருவர் வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது, உள்ளிட்டவற்றை அதிகம் நாடுவார் களாம். குழந்தைச் செல்வங்கள் நடுவில் வந்து விட்டதால் சிலர் வாய்ப்பு கிடைக்கும்போது, பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு அவசர கதியில் செயல்படுவதும் உண்டாம்.

30 வயதைத் தாண்டிய பெண்களில் 90 சத வீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிற தாம். அதேசமயம், 20 வயதுகளில் உள்ள பெண்களுக்கு இது 23 சதவீதமாகவே உள்ளதாம்.

40 + வயது…

40 வயதைத் தாண்டிய பெரும்பாலான ஆண்களுக்கு எரக்ஷன் பிரச்சினை வந்து விடுகிறதாம். மேலும், இந்த வயதில் நேரடி செக்ஸ் உறவை விட படம் பார் ப்பது, செக்ஸ் சாட்டிங் செய்வது என்று வெ ளிவேலைகளில் அதிக ஆர்வம் காட்டு வார்களாம் ஆண்கள்.

பெண்களுக்கோ இந்த வயதில் செக்ஸ் ஆசை அதிகரிக்குமாம். தங்களது கணவர் அல்லது பார்ட்னரை விட இளம் வயதினரைப் பார்க்கும்போது மோகம் பிறக்கிறதாம்.

மாதாந்திர உறவு எண்ணிக்கை இந்த வயதினர் மத்தியில் குறை வாக இருந்தாலும் மனசுக்குள் செக்ஸ் ஆசை நிறையவே இரு க்குமாம். ஒரு தடவையாக இருந் தாலும் அதை நிறைவாக, நிதான மாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்களாம்.

டிரேஸி கூறியுள்ளதெல்லாம் அவ ரது மேற்கத்திய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவி த்துள்ள கருத்துக்களாகும். ஆனால் இது நம்மூருக்கு பொருந்தாது என்றே தோன்றுகிறது


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies