BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Saturday, 19 July 2014

ஏவுகணை தாக்குதலில் சிக்கிய மலேசிய விமானம் தகவல்கள்

பிரதமர் இரங்கல்

மலேசிய விமானம் தாக்கப்பட்டு 298 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: எம்.எச்.17 விமானத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இந்த துயரமான தருணத்தை அவர்களுடன் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.








தீவிரவாதிகள் கைவரிசையா? மலேசியா உறுதிப்படுத்தவில்லை

மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கூறுகையில், குற்றவாளிகள் நீதியின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும். தாக்குதல் சம்பவம் நடந்த நாளும், இந்த 2014ம் ஆண்டும் எங்களுக்கு சோகமாக அமைந்து விட்டது. ரஷ்ய ஆதரவு தீவிரவாதிகள்தான் இந்த சம்பவத்தை நடத்தியதாக உக்ரைன் அரசு சொல்கிறது. தீவிரவாதிகள்தான் செய்தார்கள் என்று நாங்கள் இன்னும் உறுதி செய்யவில்லை. அது உறுதி செய்யப்பட்டால், குற்றவாளிகள் நிச்சயமாக நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். மேற்கொண்டு விசாரணை நடத்துவது தொடர்பாக உக்ரைன் அதிபர் போரோஷென்கோவுடன் பேசி உள்ளேன் என்றார்.

இதே வான் வழிதான், பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய பிரதமர் மோடி வந்த விமானத்துக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அச்சுறுத்தல் ஏதும் வரவில்லை என்றார் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கணபதி ராஜூ.

மரணத்தை தேடி சென்ற இந்திய வம்சாவளி ஊழியர்

மலேசிய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விமான பணியாளர் சஞ்சித் சிங்கும் ஒருவர். இவர் மலேசியாவில் உள்ள பினாங்கை சேர்ந்தவர். தாக்குதல்  நடந்த அன்று அவருக்கு வேலைநாள் கிடையாது. இருப்பினும், ஆம்ஸ்டர்டமில் இருந்த அவர், பினாங்கில் உள்ள தனது பெற்றோரை பார்ப்பதற்காக, வேலை நேரத்தை மாற்றி கொண்டு விமானத்தில் சென்றார்.

* மலேசிய விமானம் வீழ்த்தப்பட்ட இடத்தை தவிர்த்து, கிழக்கு உக்ரைனின் மற்ற அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும்என்று தீவிரவாதிகளின் தளபதி கூறியுள்ளார்.
* ஒரே தாக்குதலில் 300 பேரை தீவிராவதிகள் கொன்று விட்டனர் என்று உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ குற்றம் சாட்டியுள்ளார்.
* ஏவுகணை மூலமாகத்தான் மலேசிய விமானம் தாக்கப்பட்டிருப்பதாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
* தாக்குதல் நடத்தியது தொடர்பாக இரு தீவிரவாதிகள் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவு தங்களிடத்தில் உள்ளதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது.
* 15 மலேசியர்களை கொண்ட விமான ஊழியர்கள் குழுவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஏஞ்சலின் பிரமிளா ராஜேந்திரன் (30) என்பவரும் அடங்குவார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies