BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Sunday, 20 July 2014

''விமானத்தில் பயணித்தால் திரும்பாமல் போகலாம், ஒரு வழி பயணச்சீட்டு வாங்கினால் போதும்'' வேடிக்கை உண்மையான பரிதாபம்

உக்ரேனுக்கு மேலாக கடந்த வாரம் பயணித்தவேளை சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய எம்.எச். 17 விமானத்தில் பயணித்து உயிரிழந்த அவுஸ்திரேலிய குயீன்ஸ்லாந்தைச் சேர்ந்த நபரொருவர் தான் ஐரோப்பாவுக்கான விடுமுறை சுற்றுலாவிலிருந்து திரும்பப்போவதில்லை என தனது சகோதரருடனான உரையாடலின் போது வேடிக்கையாக கூறியுள்ளார்.

இந்த விமான அனர்த்தத்தில் ஹவார்ட் ஹோர்டர் (68 வயது) என்ற மேற்படி நபரும் அவரது மனைவி சூஸனும் (63 வயது) பயணித்திருந்தனர்.

பிறிஸ்பேனிலிருந்து விமானத்தில் புறப்படுவதற்கு இரு நாட்களின் முன் ஹவார்ட் தனது சகோதரர் கிளென் ஹோர்ட்டுடன் உரையாடுகையில் மலேசிய எயார்லைன்ஸ் விமானத்தில் பயணிப்பதாயின் தனக்கு ஒரு வழிப்பயணச் சீட்டு போதும் என வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நகருக்கு பயணித்த மலேசியன் எயார்லைன்ஸ் எம்.எச். 370 விமானம் காணாமல் போனமை தொடர்பாக குறிப்பிடும் வகையில் அந்த விமானத்தில் பயணித்தால் அது திரும்பாமல் போகலாம் அதனால் ஒரு வழி பயணச்சீட்டு வாங்கினால் போதுமானது என அவர் கூறியுள்ளார்.

அவர் வேடிக்கையாகவே அவ்வாறு கூறினார். எனினும் ஐரோப்பிய பயணத்திலிருந்து திரும்புவதற்கான பயணச்சீட்டை வாங்கியிருந்தார். ஆனால் அவர் வேடிக்கையாகக் கூறியது இறுதியில் உண்மையாகி விட்டது என கிளென் தெரிவித்தார்.


URL Shortener | Indian Banks IFS Code | Free Seo Tools | Free Blogger Tips and Tricks | Ulavu.Com

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

url shortener

 
Copyright © 2013 Latest Tamil News is a No.1 Leading Tamil Daily Online News
Designed by Bharath Technologies